விழுப்புரம் அருகே மேம்பாலத்தில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து – ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..!

1 Min Read

விழுப்புரம் அருகே மேம்பாலத்தில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்தில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து காணலாம்.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் மாவட்டம், அருகே ஜானகிபுரம் என்ற இடத்தில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று மேம்பாலத்தில் திடீரென்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேம்பாலத்தில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து

விழுப்புரம் மாவட்டம், அருகே ஜானகிபுரம் என்ற இடத்தில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அட்டைப்பெட்டிகள் ஏற்றிக்கொண்டு கண்டைனர் லாரி வந்த நிலையில் விழுப்புரம் அருகே ஜானகிபுரம் என்ற இடத்தில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் போக்குவரத்து சீராகவே சென்று இருந்த நிலையில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் கட்டுப்பட்ட இழந்து மேம்பாலத்தில் திடீரென கண்டைனர் லாரி மோதி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

மேம்பாலத்தில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து

அதில் கண்டெய்னர் லாரியின் முன்புறம் மேம்பாலத்திற்கு மேலிருந்து கீழே தொங்கியபடியும், லாரியின் மற்ற பாகங்கள் மற்றும் லாரியில் கொண்டு செல்லப்பட்ட பேப்பர் பண்டல்கள் மேம்பாலத்தில் சிதறியது.

இதனால் இந்த விபத்தில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவத்தை கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு காவல் துறையினர் முண்டியம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

Share This Article
Leave a review