பேருந்து விபத்து
திருச்சி மாவட்டம் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து திருக்காட்டுப்பள்ளி நோக்கி வந்து கொண்டு இருந்தது. சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஒரத்தூர் வழியாக ஆற்காடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது,அந்த வழித்தடத்தில் கூட்டுக் குடிநீர்க்காக சாலை ஓரம் பள்ளம் தோண்டி மூடப்பட்டிருந்தது.
சரிவர இந்த சாலை மூடப்படாததால் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் தோண்டப்பட்டிருந்த பகுதியில் மழையின் காரணமாக மணல் உள்வாங்கி இருந்துள்ளது. இது அறியாத அவ்வழியாக வந்த பேருந்தின் பாரம் தாங்காமல் பள்ளத்தில் பேருந்து சிக்கி மெதுவாக சாய தொடங்கியது.

இதில் பேருந்தில் பயணம் செய்தவர்கள் பேருந்தை விட்டு கீழே இறங்கியுள்ளனர். இதனிடையே பேருந்து முழுமையாக சாலையோரம் இருந்த வயலில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில் பள்ளி மாணவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அவர்களை மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனை மற்றும் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கூட்டுக்குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்தாகும் நிலையில் வேலை செய்திருப்பது ஆபத்தானது என இனி மேலாவது உணரவேண்டும்.
Leave a Reply
You must be logged in to post a comment.