நீட் தோல்வி – குரோம்பேட்டையில் மகனை இழந்த சோகத்தில் தந்தையும் தற்கொலை 

0
185
ஜெகதீஸ்வரன்

மனைவியை இழந்த பிறகு தனது மகனின் மருத்துவ கனவை நிறைவேற்றுவதே தனது வாழ்நாள் லட்சியம் என்று வாழ்ந்துவந்த புகைப்பட கலைஞர் செல்வசேகரால் , தனது மகனின் இழப்பை தாங்க முடியாமல் இன்று தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார் .

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) இரண்டு முறையும் தோல்வி அடைந்ததால்  , 19 வயது மாணவர் சென்னை குரோம்பேட்டையிலுள்ள தனது வீட்டில் சனிக்கிழமையன்று தற்கொலை செய்து கொண்டார். அவரது இழப்பை தாங்க முடியாமல் இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரது தந்தை இன்று காலை தற்கொலை செய்து கொண்டார்.

குரோம்பேட்டை குறிஞ்சிநகரைச் சேர்ந்தவர் செல்வசேகர் (வயது 49 ) புகைப்பட கலைஞர் .

சில வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி இறந்த நிலையில் செல்வசேகர் தனது மகன் ஜெகதீஸ்வரனுடன் (வயது 19 )  குறுஞ்சிநகர் பகுதியில் வசித்து வந்தார் . சிறுவயது முதலே மருத்துவம் படிக்க விருப்பப்பட்ட செல்வசேகரின் மகன் ஜெகதீஸ்வரன் கடந்த இரண்டு வருடங்களாக நீட் தேர்வு எழுதி வருகிறார் .

இவர் பனிரெண்டாம் வகுப்பில் 85  சதவீத மதிப்பெண்ணுடன்  தேர்ச்சி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

துரதிஷ்டவசமாக 2 முறையும் ஜெகதீஸ்வரனால் அரசு இலவச ஒதுக்கீட்டிற்கு தேவையான மதிப்பெண் எடுக்க முடியவில்லை .
இரண்டு முறையும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறத் தேவையான மதிப்பெண்களைப் பெற முடியாததால் அந்த மாணவர் மனமுடைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த மனஉளைச்சலுக்கு முக்கிய காரணாமாக அவரது தந்தை அவருக்கு கிடைக்கும் சிறிய வருமானத்திலும் தொடர்ந்து இரண்டு வருடத்திற்கு நீட்  பயிற்சி மையத்தில் படிக்க 3 லட்சம் ரூபாய் வரை செலவு செய்தும் தன்னால் தேர்ச்சி பெறமுடியவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மைதான் என்று போலீசார் தகவல் தெரிவித்திருந்தனர் .

இருந்த போதிலும் அவரது தந்தை செல்வசேகர் , ஜெகதீஸ்வரனை வெளிநாட்டில் மருத்துவம் படிப்பதற்கான முயற்சிகளையும் செய்து வந்த நிலையில் , மூன்றாவது முறையாக நீட் தேர்வு பயிற்சி மையத்தில் அவரை சமீபமாக சேர்த்துள்ளார் .

இந்த சூழ்நிலையில்தான் சனிக்கிழமை அன்று ஜெகதீஸ்வரன் தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் .

தனது மகனின் இறப்பின்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செல்வசேகர் நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , நீட் தேர்வு நீக்கும்வரை தான் தொடர்ந்து போராட தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் .

மனைவியை இழந்த பிறகு தனது மகனின் மருத்துவ கனவை நிறைவேற்றுவதே தனது வாழ்நாள் லட்சியம் என்று வாழ்ந்துவந்த புகைப்பட கலைஞர் செல்வசேகரால் , தனது மகனின் இழப்பை தாங்க முடியாமல் இன்று தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார் .

நீட் மாணவன் ஜெகதீஸ்வரன் மற்றும் அவரது தந்தை செல்வசேகரின் மரணம்  தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வு அலையை ஏற்படுத்தியுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here