ஒவ்வொரு திங்கள் கிழமைகளிலும் பொது மக்கள் தங்கள் குறைகளை நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் கூற ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் நேரடியாக வருவது வழக்கம். அப்படி வருபவர்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதிக்கொண்டு வருவார்கள்.அப்படி கொண்டு வரும் மனுக்கள் ஆட்சியரிடமோ,சம்பத்தப்பட்ட துறையிலோ கொடுக்க அறிவுருத்துவார்கள்.அப்படி சம்பத்தப்பட்ட துறைகளுக்கு செல்ல ஆட்சியர் அலுவலகத்தில் முகப்பிலே ஒரு வரவேற்பறை இருக்கும்.அங்கு ஒரு பணியாளர் இருப்பார் அவர் அந்த மக்களின் தேவையறிந்து அவர்களுக்கு விளக்கமளிப்பர்.அப்படி இல்லையென்றால்,அங்கு ஒரு பெயர் பலகை அமைக்கப்பட்டிருக்கும் அந்த பெயர் பலகையில் எந்த தளத்தில் எந்த துறை அலுவலகம் எந்த எண் கொண்ட அறையில் இயங்கும் என்ற அறிவிப்பு எழுதப்பட்டிருக்கும்.ஆனால் இந்த எந்த அறிவிப்பும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லை.இப்போதுதான் இந்த நிலையா? என்றால் இல்லை இதற்கு முன் இதுவெல்லாம் இருந்தது இப்போது இல்லை.
ஓரளவுக்கு கல்வியறிவு பெற்றவர்கள் யாரிடமாவது கேட்டுத்தெரிந்துகொள்வார்கள்.பாமரமக்கள் என்ன செய்வார்கள்.கிராமப்புரங்களில் இருந்து வருபவர்களுக்கு இது பெரும் சிரமம்.இதனாலே சிலர் தங்கள் குறைகளை தெரிவிக்க வருவதில்லை என்கிறார்கள்.மக்களின் தேவையறிந்து அவற்றை செய்து கொடுக்கவே அரசும்,ஆட்சியாளர்களும் இருக்கிறார்கள்.இப்படி மக்களை அலைகழிக்க இல்லை.இது குறித்து பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்கிறார்கள் பொது மக்கள்.
இது மட்டுமில்லை கடந்த சில நாட்களாக விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொது மக்களுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் கூட வரவில்லை என்கிறார்கள் பொது மக்கள்.அதிகாரிகளை கேட்டால் குடிநீர் வழங்கும் இயந்திரம் பழுதாகி உள்ளது என்கிறார்கள்.இதற்கு இது பதில் இல்லையே என்கிறார்கள் பொது மக்கள்.
கிராமங்களில் இருந்து வரும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்.ஒவொரு நாளும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு சுமார் 500 பொது மக்கள் வருவது வழக்கம்.திங்கட்கிழமைகளில் 1000 க்கும் மேற்பட்டோர் வருவார்கள்.இப்படி வருபவர்கள் தினம்,தினம் இந்த சிரமத்தை அனுபவிக்கிறார்கள்.இனியும் இது போன்ற நிலை இருக்கக்கூடாது என்கிறார்கள் பொது மக்கள்.இதே ஆட்சியர் அலுவலகத்திற்கு அமைச்சர்கள் வருகிறார்கள, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகிறார்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் மக்கள் பிரதி நிதிகள் என பலறும் வந்தும் இந்த குறையை தீர்க்கவில்லை என்கிறார்கள் பொது மக்கள்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக பொது மக்கள் பயன்படுத்தும் விதமாக வரவேற்பறை,துறை சார்ந்த அறிவிப்பு பலகை குடி நீர் வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள்.இல்லையென்றால் முதலமைச்சர் கவனத்திற்க்கு கொண்டு செல்ல நேரிடும் என்கிறார்கள் பொது மக்கள். தீருமா? பிரச்சனை பொருத்திருந்து பார்ப்போம்.
-தி நியூஸ் கலெக்ட்