திண்டுக்கல் மாவட்டம், அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது கொடைக்கானல். இது முற்றிலும் மலைச்சாலைகள் அமைந்துள்ள கொடைக்கானலில் நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தினந்தோறும் ஏராளமான தனியார் மற்றும் அரசு பேருந்துகள் திண்டுக்கல் மதுரை வத்தலகுண்டு கொடைரோடு பெரியகுளம் தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தினந்தோறும் கொடை ரோடு பகுதியில் இருந்து வத்தலகுண்டு கொடைக்கானல் மேல்மலை பகுதியான கவுன்சி வரை தனியார் பேருந்து காலையில் பயணிகளுடன் செல்கிறது. இந்த நிலையில் இன்று காலை கொடைரோடு பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து வத்தலகுண்டு பேருந்து நிலையத்துக்கு ஒம்போது முப்பதுக்கு வந்துள்ளது.

அதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு வத்தலகுண்டு தாண்டி கொடைக்கானல் மலைச்சாலையில் சென்ற பொழுது டம் டம் பாறை அருகே கொடைக்கானலில் இருந்து வத்தலகுண்டு நோக்கி வந்த டிப்பர் லாரி நேருக்கு நேராக தனியார் பேருந்து மோதியது.

இதில் பேருந்தில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். மேலும் பேருந்தின் முன் பகுதியில் அமர்ந்த பெண் ஒருவர் பேருந்தின் கண்ணாடியை உடைத்து கொண்டு சுமார் 100 அடி பள்ளத்தில் கீழே விழுந்தார்.

அப்போது பேருந்தும் லாரியும் நேருக்கு நேராக போதே பார்த்த இப்பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கி பேருந்தில் பயணம் செய்த பயணிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் வத்தலகுண்டு கொடைக்கானல் காவல்துறைக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதை எடுத்து 100 அடி பள்ளத்தில் கீழே விழுந்த பெண்ணையும் மீட்டனர். பின்பு அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை. டிப்பர் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தின் காரணமாக சாலையில் இரு பகுதிகளிலும் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.