போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி சிம் கார்டு வாங்கினால் 3 ஆண்டு சிறை

1 Min Read

தொலைத்தொடர்பு மசோதா 2023 நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இந்த மசோதா உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளுங்கள் (KYC) என்ற கடுமையான விதிமுறைகளுடன் வாடிக்கையாளர்களப் பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்துகிறது.

- Advertisement -
Ad imageAd image

போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி சிம் கார்டு வாங்கினால் 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ஐம்பது லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

தொலைபேசி எண்ணில் மோசடி செய்பவர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ஐம்பது லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

சிம் பாக்ஸ் போன்றவற்றின் மூலம் தொலைத்தொடர்பு சேவையைப் பயன்படுத்தினால் 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ஐம்பது லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

சிம் கார்டு

வேறொருவரின் அடையாளச் சான்றைப் பயன்படுத்தி மோசடியாக சிம் கார்டு வாங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

மாநில அரசு தலைமையிலான சர்ச்சைத் தீர்வுக் கட்டமைப்பு. மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதி உரிமைப் பிரச்சனைகளைத் தீர்மானிப்பார்கள்.

தொலைத்தொடர்பு கட்டமைப்பை நிறுவுவதற்கு, பொதுச் சொத்தாக இருந்தால், குறிப்பிட்ட காலவரையறைக்குள் அனுமதி வழங்க வேண்டும்

தனியார் சொத்தாக இருந்தால், உரிமையாளருக்கும், தொலைத் தொடர்பு கட்டமைப்பை நிறுவும் நபருக்கும் இடையிலான பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Share This Article
Leave a review