தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ஒரே கட்டத்தில் ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் வரும் மார்ச் 20-ம் தேதி தொடங்குகிறது.
இந்தியாவில் வரும் ஜூன் 6-ம் தேதியுடன் மத்தியில் ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில், தேர்தல் நடைபெறும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மார்ச் 20-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும், மார்ச் 27-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மார்ச் 28-ம் தேதி வேட்புமனு பரிசீலனையும், மார்ச் 30-ம் தேதி வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலும் அன்றே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்குப்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது;- தற்போது தமிழ்நாட்டில் பாஜக தேர்தலுக்கு தயாராக இருக்கிறது.

இந்த தேர்தல் தமிழகத்தில் இருக்கும் அனைவருக்கும் சவாலான ஒன்று. இந்த முறை தமிழக தேர்தல் களம் பாஜக-வுக்கு சாதகமாக உள்ளது. அப்போது அனைத்து கட்சிகளுக்கு சவால் இருப்பது உண்மை தான். அதையெல்லாம் எதிர்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அடுத்து கோவை, சேலத்துக்கு பிரதமர் மோடி வருகிறார். இது இன்னும் அதிக உற்சாகத்தை எங்களுக்கு தரும்.

மேலும் 39 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை முடிவு செய்யும் போது விளவங்கோடு தொகுதிக்கும் வேட்பாளர் முடிவு செய்யப்படுவார். அப்போது கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. மேலும் 39 தொகுதிகளுக்கும் சேர்த்து தான் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.