தமிழக – கேரளா எல்லையான கோவை, ஆனைகட்டி அடுத்து உள்ள புளியபதி என்ற மலை கிராம பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு இரண்டு சிறுத்தைகள் மோதிக் கொண்டன.
அதில் ஆண் சிறுத்தை காயங்களுடன் கேரள மாநிலத்திற்கு சொந்தமான வனத்தில் படுத்துக் கொண்டு இருந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் கேரள மாநில வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் காயங்களுடன் படுத்து இருந்த சிறுத்தை அருகில் சென்ற போது திடீரென வனத்துறையினரை துரத்தியது. அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
நீண்ட முயற்சிக்கு பின்னர் காயம் அடைந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி வலையால் மூடி அந்த சிறுத்தையை பிடித்து கூண்டில் அடைத்தனர்.

பின்னர் அங்கு உள்ள சைலண்ட் வேலி வனத்துறை முகாமிற்கு கொண்டு சென்று காயம் அடைந்த சிறுத்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் காயமடைந்த சிறுத்தை பிடித்து சென்ற வனத்துறையினரை தாக்க முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.