மகளிர் ஆயிரம் ரூபாய் திட்டத்தினால் பெண்கள் அதிமுக பக்கம் தான் வருவார்கள்- திண்டுக்கல் சீனிவாசன்

0
49
திண்டுக்கல் சீனுவாசன்

மகளிர் உரிமை திட்டம் மூலம் தகுதி உள்ள பெண்களுக்கு மட்டும் 1000-ரூபாய் கொடுக்கும் திட்டத்தின் மூலம் ஸ்டாலின் நமக்கு நன்மை செய்து கொண்டு இருக்கின்றார் இதனால் அனைத்து பெண்களும் அதிமுக பக்கம்தான் வருவார்கள் என தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக பொன்விழா மாநாடு ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுகல் சீனிவாசன்  பேசினார்.

தூத்துக்குடி:  அடுத்த மாதம் ஆகஸ்ட் 20-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அதிமுக பொன் விழா மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டம் அதிமுக  தெற்கு மாவட்ட  செயலாளர் எஸ்பி சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி, திருச்செந்தூர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில்   நடைபெற்றது.

இந்த  ஆலோசனை  கூட்டத்தில் , துணை பொதுச்செயலாளர் கேபி.முனுசாமி,  பொருளாளர் திண்டுக்கல் சி. சீனிவாசன்,
துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன், அமைப்புச் செயலாளர் செங்கோட்டையன்,  பி தங்கமணி, கே எஸ் செல்லூர் ராஜு, என்.சின்னத்துரை,   தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி வேலுமணி,  அமைப்புச் செயலாளரும், எம்பியுமான சி.வி.சண்முகம்,  மகளிர் அணி செயலாளர் வளர்மதி,   சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார், ராஜன் செல்லப்பா கழக இளைஞர் பாசறை செயலாளர் பரமசிவம், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.‌

இதனை தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும்போது

50-ஆண்டு காலம் நிறைவு செய்த அதிமுக பல்வேறு போராட்டங்கள் சோதனைகளை சந்தித்துள்ளது பதவி வெறியர்கள் சின்னத்தை முடக்கினர் ஆனால் எடப்பாடியார் தொண்டர்களின் துணையோடு மீண்டும் சின்னத்தை மீட்டெடுத்தார் துரோகம் , சூழ்ச்சி செய்யும் சிலர் திமுகவுடன் சேர்ந்து அதிமுக வை காலி செய்ய நினைக்கின்றனர் அது நடக்காது இரட்டை இலை சின்னம் இருக்கும் வரை எந்த கொம்பனாலும் மயிர கூட புடுங்க முடியாது என ஆவேசமாக பேசினார்.
மேலும் மதுரையில் நடைபெற இருக்கும் மாநாடு வீர வரலாறு மாநாடாக இருக்க வேண்டும் என சி.வி சண்முகம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் திண்டுகல் சீனிவாசன் பேசும்போது
பெரிய ஜாதி தலைவர் என்று சொல்லுகின்ற டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜூவை எதிர்த்து நின்று வாங்கி கட்டி கொண்டார் என்ற அவர் எப்படி அடிச்சாலும் அலுகமாட்டேங்கிறான் என்று வடிவேல் சொல்லுவதுபோல் இருக்கின்றது என்ற அவர்  இப்போது டிடிவி தினகரனும் ஓ.பன்னீர் செல்வமும் சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க போவதாக கூறுகின்றார்.  எத்தனை கேவலப்பட்டாலும் வெளியே போக மாட்டேங்குறார் என்று டிடிவி தினகரனை சாடினார்.  மேலும் திமுகவின் பி டீமாக செயல்படும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சரியான பாடம் அதிமுக கற்று கொடுத்து வருவதாக தெரிவித்த அவர் மகளிர் உரிமை திட்டம் மூலம் தகுதி உள்ள பெண்களுக்கு மட்டும் 1000-ரூபாய் கொடுக்கும் திட்டத்தின் மூலம் ஸ்டாலின் நமக்கு நன்மை செய்து கொண்டு இருக்கின்றார் இதனால் அனைத்து பெண்களும் அதிமுக பக்கம்தான் வருவார்கள் என்று அவர் பேசினார்.

முன்னதாக  மேடையில் பேசிகொண்டிருக்கும்-போது முன்னால் அமைச்சர் எஸ்.பி.சன்முக நாதன் திண்டுகல் சீனிவசனுக்கு சால்வை அறிவித்தபோது இதுவரை தூத்துக்குடிக்கு வந்தவுடன் மூன்று முறை சால்வை அணிவித்து விட்டார் பேசாட்டு ஒரு துணிக்கடை வைத்து தரலாம் என திண்டுகல் சீனிவாசன் நகைச்சுவையாக பேசியது கூட்டம் நடைபெற்ற  மண்டபத்தில் சிரிப்பலையை எழுப்பியது.

இதைதொடர்ந்து அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனியசாமி பேசும்போது வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அச்சாளியாக தான் மாநாடு நடைபெறுகிறது என தெரிவித்தார். இந்த தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் உள்ள கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்த  அவரது மகள் கனிமொழியை  தோற்கடித்தால் திமுகவின் அங்கம் வீழ்த்தப்படும் என்றார் மேலும் அதிமுக கூட்டணியில் யார் போட்டியிட்டாலும் எதிர்த்து நிற்கிற திமுக வேட்பாளர் கனிமொழியை தோற்கடிப்பது தான் நமது இலக்காக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here