விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி கொடி கம்பம் நட்டு வைக்கப்பட்டுள்ளது. பின்னர், நாம் தமிழர் கட்சியினர் 30 பேர் மீது வழக்கு பதிவு.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பேருந்து நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சியினர் கொடி கம்பம் வைத்து, கட்சி கொடி ஏற்று போவதாக கூறி கொடி கம்பத்தை நட்டினார். இதற்கு முறையான அனுமதி இல்லை என வருவாய் துறையினர் சனிக்கிழமை அன்று இரவோடு இரவாக கொடி கம்பத்தை அகற்றி கண்டாச்சியர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நாம் தமிழர் கட்சியினர் கொடி கம்பத்தை நட்டு கொடியேற்ற முயன்றார்.

அப்போது கண்டாட்சிபுரம் உதவி ஆய்வாளர் குருபரன் தலைமையிலான போலீசார் கொடியேற்ற அனுமதி இல்லை எனக் கூறி கொடியேற்ற முயன்ற நாம் தமிழர் கட்சியினரை தடுத்து நிறுத்தினர். இதனை அடுத்து காவல்துறை மற்றும் வருவாய் துறையினரிடம் நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கட்சியினரை கண்டாச்சிபுரம் வருவாய் வட்டாட்சியர் கற்பகம், வட்டாச்சியர் அலுவலகம் அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மண்டல பொருள் பொருளாளர் விக்ரமன் தலைமையிலான 30க்கும் மேற்பட்டோர் அனுமதி இன்றி கண்டாச்சிபுரம் பேருந்து நிலையத்தில் கொடி கம்பம் நட்பு கொடி ஏற்றி சென்றார்.

இதை அடுத்து வருவாய் துறையினர் நேற்று அனுமதியின்றி ஏற்றப்பட்ட கொடி கம்பத்தை அகற்றி காவல் துறையிடம் ஒப்படைத்து கண்டாச்சிபுரம் கிராம நிர்வாக அலுவலர் பிரசாத் குமார் கொடுத்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் விழுப்புரம் மண்டல பொருளாளர் விக்ரமன் உள்பட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, உதவி ஆய்வாளர் குருபரன் விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகிறார்.