புதுவையில் சிறுமி கொடூர கொலை சம்பவத்தில் வாக்குகள் இழப்பு ஏற்படுமா.? – குழப்பத்தில் தவிக்கும் பாஜக..!

5 Min Read

புதுவையில் சிறுமி கொடூர கொலை செய்யப்பட்டதை கண்டித்து பல இடங்களில் மறியல் நடந்ததால் வாக்குகளுக்கு இழப்பு ஏற்படுமா? என குழப்பத்தில் பாஜக தலைமை சிக்கி தவிக்கிறது.

- Advertisement -
Ad imageAd image

நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. இதனை அடுத்து தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் வரும் நிலையில், பாஜக சார்பாக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

புதுவையில் சிறுமி கொடூர கொலை

மேலும் தமிழகத்தில் திமுக, தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடடை காங்கிரசை தவிர்த்து முடித்து விட்டது. இதுபோன்று எதிர்க்கட்சிகளும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் புதுச்சேரி தொகுதியில் மாநில தலைவரான தற்போதைய எம்.பி. வைத்திலிங்கமே மீண்டும் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக தனித்து போட்டியிடுகிறது.

நாடாளுமன்ற தேர்தல்

இதற்கிடையில் நேற்று முன்தினம் மாநில திமுக, அவசர செயற்குழுவை கூட்டி 30 ஆண்டுகளாக கூட்டணி கட்சிக்கே தொகுதியை விட்டு கொடுக்கிறோம்.

இந்த முறை திமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து தீர்மானத்தையும், கட்சியினர் விருப்பத்தையும் தெரிவித்தனர்.

பாஜக

இதுபோன்று என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, தங்களுக்கு புதுவையை ஒதுக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. பாஜக மேலிட தலைவர்களும் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

அப்போது ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுத்து ராஜ்யசபா எம்பி பதவியை தட்டி பறித்த மோடி அரசு. அவரது ஆலோசனை இல்லாமலேயே 3 நியமன எம்எல்ஏக்கள் பதவிகளையும் பாஜகவை சேர்ந்தவர்களுக்கு வழங்கி என்.ஆர். காங்கிரசுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

ரங்கசாமி

இதேபாணியில் தேசிய ஜனநாயக கூட் டணியின் மாநில தலைவர ரங்கசாமியிடம் புதுவை தொகுதியை கேட்காமல் பல இடங்களில் பாஜக நிரவாகிகள் சுவர் விளம்பரம் செய்து தனது விருப்பத்தை நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுபோன்று மூத்த நிர்வாகிகளும் பாஜக போட்டியிடுவதாக கூறி வந்தனர்.

இந்த நிலையில் என். ஆர்.காங்கிரஸ் 14-ம் ஆண்டு விழாவில் நிர்வாகிகளின் எதிர்ப்பை சமாதானம் செய்து விட்டு, புதுவை மக்களவை தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான ரங்கசாமி அறிவித்தார்.

துணைநிலை ஆளுநர் தமிழிசை

இதனை அடுத்து புதுவையில் பாஜக சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில் தற்போது மாநில ஆளுநராக இருக்கும் தமிழிசை போட்டியிட இருப்பதாக கூறப்பட்டது. அவரும் மக்களிடம் நேரில் தொடர்பில் இருக்கத்தான் ஆசை.

எனவே தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சஸ்பென்ஸ் என கூறி வந்தார். இவருக்கு ரங்கசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்போது இந்த திட்டம் கைவிடப்பட்டது.

நிர்மலா சீதாராமன்

இதனை தொடர்ந்து உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அல்லது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் போட்டியிட இருப்பதாக கூறப்பட்டது.

ஆளும் தரப்பு கூட்டணி தலைவரான முதல்வர் ரங்கசாமி, பாஜகவுக்கு பச்சைக்கொடி காட்டிய நிலையில், பாஜக தரப்பில் வேட்பாளரை தேர்வு செய்வதில் சிக்கல் தொடர்கிறது.

பாஜக தலைமை

தற்போது அரசியலில் முக்கிய பதவிகளில் உள்ள யாரும் போட்டியிட விரும்பவில்லை. இதற்கிடையே தொகுதி பாஜக பொறுப்பாளரான நிர்மல் குமார். “நீங்கள் எல்லாம் ஆச்சரியப்படும் வேட்பாளர் ஒருவர் புதுச்சேரி தொகுதிக்கு அறிவிக்கப்படுவார் என்று நிர்வாகிகளிடம் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதுபற்றி பாஜக உயர் மட்ட தலைவர்கள் சிலர் கூறியதாவது;- பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெறலாம் என கட்சி தலைமையிடம் வலியுறுத்தினோம். ஆனால் நமச்சிவாயமோ புதுவை அரசியலில் தொடரவே விரும்புகிறார்.

புதுவையில் சிறுமி கொடூர கொலை சம்பவத்தில் வாக்குகள் இழப்பு ஏற்படுமா

தான் போட்டியிட விரும்பவில்லை என்றும், கட்சி நிறுத்துபவரை வெற்றி பெற வைப்பது எனது பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் புதுச்சேரியில் பாஜக சார்பில் போட்டியிட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிடுவதற்கு வசதியாக புதுவையில் வீடு பார்ப்பதாக கட்சி நிர்வாகிகள் கூறினர். ஆனால் இதுவரை அதுபற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

புதுவையில் சிறுமி கொடூர கொலை சம்பவத்தில் வாக்குகள் இழப்பு ஏற்படுமா

தமிழகத்தில் இல்லாவிட்டாலும், புதுச்சேரியில் களம் கண்டு வெற்றி பெற்று ஒரு ‘தமிழ்’ அடையாளத்தோடு நிர்மலா சீதாராமன் இந்த முறை கேபினட் வந்தால், அது ஒரு கூடுதல் தகுதியாக இருக்கும் என்று பாஜக தலைமை என்று கூறப்படுகிறது.

வேட்பாளர் யார்? என்பது 2-வது கட்சி வேட்பாளர் பட்டியலில் நிச்சயம் இடம்பெறும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல்

இந்த நிலையில் கடந்த 2-ம் தேதி புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த தம்பதியரின் 5-ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி மாயமானார் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

இதற்இடையே கடந்த 5-ம் தேதி சோலை நகர் பகுதியில் அம்பேத்கர் வீதி கண்ணதாசன் வீதி இடையே செல்லும் கழிவுநீர் கால்வாயில் சாக்கு மூட்டை மிதந்ததை கண்டுபிடித்தனர்.

குழப்பத்தில் தவிக்கும் பாஜக

இந்த பிரச்சனை புதுவை முழுவதும் விஸ்வரூபம் எடுத்தது. பல இடங்களில் மறியல் நடந்தது. அதில் பெண்களும் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். பதற்றம் அதிகரிக்கவே புதுச்சேரிக்கு தேர்தல் பணிக்காக வந்த துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர்.

மக்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஒரு சில இடங்களில் தடியடி சம்பவமும் நடந்தது. இது, பெண்கள் மத்தியில் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரங்கசாமி

தமிழகத்தை போன்று குற்றவாளியான முதியவரை போலீசார், சுட்டு பிடித்து இருக்க வேண்டும் என கண்டன குரல் எழுந்து வருகிறது. இதனால் புதுவை தொகுதியில் பாஜக நின்றால் வெற்றி வாய்ப்பு என்பது காணல் நீராக போய்விடும் என பாஜக குழப்பமாக உள்ளது.

இது குறித்து பாஜக மூத்த நிர்வாகி கூறுகையில்;- ஆட்சியில் சாதனைகளை பிரசாரத்தில் கூறி, வெற்றி பெறலாம் என எண்ணி இருந்தோம். தற்போது சிறுமி கொடூரகொலை சம்பவம் பெண்கள் மத்தியில் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுவையில் சிறுமி கொடூர கொலை சம்பவத்தில் வாக்குகள் இழப்பு ஏற்படுமா

இது நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். எனவே தொகுதியை என்.ஆர். காங்கிரசுக்கு கொடுத்தால் அவர் நிலைமையை சமாளிப்பார். கட்சி தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ, அதன்படி தேர்தல் பணி ஆற்றுவோம் என்றார்.

புதுவையில் சிறுமி கொடூரகொலை சம்பவம் தேசிய ஜனநாயக கூட்டணியான என்.ஆர். காங்கிரஸ், பாஜக நிர்வாகிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review