விஷச்சாராய விவகாரத்தில் யார் தொடர்பில் இருந்தாலும் பாரபட்சமின்றி கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்..!

1 Min Read

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கி கூறுகையில்;-

- Advertisement -
Ad imageAd image

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்ற வேண்டும். ரிஷிவந்தியம் பகுதியில் விஜயகாந்த் எம்எல்ஏ நிதியிலிருந்து அமைக்கப்பட்ட பஸ் நிலையம் ஏன் மாற்றப்பட்டது.

தேமுதிக

மீண்டும் அதே இடத்தில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும், இல்லையென்றால் தேமுதிக தலைமையில் போராட்டம் நடத்தப்படும். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 60 பேர் இதுவரை இறந்துள்ளனர். அதில் தேமுதிகவினர் யாரும் பாதிக்கப்படவில்லை.

தலித் சமூகத்தினர் எங்கேயாவது பாதிக்கப்பட்டால் அரசியல் கட்சியினர், நடிகர்கள், வரிந்து கட்டிக்கொண்டு குரல் கொடுப்பார்கள். ஏன் கள்ளக்குறிச்சியில் தலித் மக்கள் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தது குறித்து குரல் எழுப்பவில்லை.

மெத்தனால் கலந்த விஷச்சாராய விவகாரம்

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் சம்பவம் குறித்து தமிழக ஆளுநரை சந்தித்து தேமுதிக சார்பில் மனு அளிக்கப்படும். கள்ளக்குறிச்சியில் எவ்வித வேலைவாய்ப்புகள், தொழிற்சாலைகள் அமைக்கப்படவில்லை. இளைஞர்களுக்கு வாழ்வாதாரத்துக்காக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

விஷச்சாராய விவகாரத்தில் யார் தொடர்பில் இருந்தாலும் பாரபட்சமின்றி கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழக முதல்வர் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள சாலை திட்டத்துக்காக நிதி ஒதுக்கினார். ஆனால், சென்னையிலிருந்து நான் வருவதற்கு பலமணி நேரம் ஆகிறது. இந்த சாலை மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் மோசமாக இருக்கிறது.

இந்த கள்ளசாராய விவகாரத்தில் யார் தொடர்பில் இருந்தாலும் பாரபட்சமின்றி கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Share This Article
Leave a review