புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் யார் ? – பாஜக மேலிட தலைவர்கள் ஆலோசனை..!

3 Min Read

புதுவை நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் யார் என்பது குறித்து மேலிட தலைவர்கள், உள்ளூர் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -
Ad imageAd image

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இதனையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகி வருகின்றன. புதுவையில் காங்கிரஸ், திமுக, அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தலை சந்திக்க பல்வேறு வியூகங்கள் அமைத்து களத்தில் இறங்கி தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் யார்

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அந்த கட்சி விரைவில் யார் வேட்பாளர் என்பதை அறிவிக்கும் என முதல்வர் ரங்கசாமி நேற்று முன்தினம் கூறினார்.

இந்த நிலையில் புதுச்சேரியில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், பங்கேற்க மத்திய அமைச்சர் பிரகலாத்ஜோஷி, பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆகியோர் நேற்று புதுச்சேரிக்கு வந்தனர்.

பாஜக மேலிட தலைவர்கள் ஆலோசனை

முன்னதாக ஒன்றிய அமைச்சர் பிரகலாத்ஜோஷியை முதல்வர் ரங்கசாமி நேரில் சந்தித்து பேசினார். அப்போது புதுச்சேரி தொகுதியில் பாஜக போட்டியிடும் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததற்கு ரங்கசாமிக்கு நன்றி கூறினார்.

அப்போது, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய். ஜெ.சரவணன்குமார், பாஜக தலைவர் செல்வகணபதி – எம்பி, எம்எல்ஏக்கள் கல்யணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட் ஜான்குமார், ராமலிங்கம், அசோக்பாபு, ஜிஎன்எஸ் ராஜசேகரன் ஆகியோருடன் ஒன்றிய அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

நிர்மலா சீதாராமன்.

அதில் புதுச்சேரி தொகுதியில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட 3 பேர் கொண்ட பட்டியலில், யாரை வேட்பாளராக போடுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தமிழகத்தை காட்டிலும் புதுச்சேரி தொகுதியில் நிற்பதை பாதுகாப்பானதாக கருதுவதாக அந்த கட்சி கூறி வந்தனர். இதனால் துணை நிலை ஆளுநர் தமிழிசை புதுச்சேரி தொகுதியில் போட்டியிடவில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

தேஜ கூட்டணி தலைவர் ரங்கசாமி

இந்த கூட்டத்தை முடித்து கொண்டு முதல்வர் ரங்கசாமி புறப்பட்டு சென்றார். பின்னர் பாஜக மாநில பொறுப்பில் உள்ள நிர்வாகிகளுடனான தேர்தல் மையக்குழு கூட்டம் நேற்று நடந்தது.

தேர்தல் முன்னேற்பாடுகள், வியூகங்கள் குறித்து நிர்வாகிகளின் கருத்துக்களை ஒன்றிய அமைச்சர் பிரகலாத்ஜோஷி கேட்டறிந்தார். நாடாளுமன்ற தேர்தலில் நின்றால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து ஒன்றிய அமைச்சரிடம் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

பாஜக

இது குறித்து மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவிடம் கேட்டபோது;- தேர்தல் முன்னேற்பாடுகள் கடந்த 2 மாதங்களாக கூட்டம் நடத்தி வருகிறோம். அனைத்து நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒன்றிய அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுவரை தேர்தலுக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள், இனிமேல் என்ன? செய்ய வேண்டும் என ஆலோசனை நடத்த ஒன்றிய அமைச்சர் புதுச்சேரிக்கு வந்துள்ளார். தேஜ கூட்டணி தலைவர் ரங்கசாமி பாஜக போட்டியிடும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள்.

ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன்

தாமரை சின்னத்தில் தான் நிற்கப்போவதையும் உறுதிப்படுத்தி உள்ளார். அதற்கு அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம். வெளியூரை சேர்ந்தவரா? அல்லது மண்ணின் மைந்தரை வேட்பாளராக முன்னிறுத்த போகிறீர்களா என கேட்டபோது;-

வேட்பாளர் யார் என்பது தொடர்பாக முதற்கட்ட கூட்டம் தான் நடந்துள்ளது. இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான திட்டம் இப்போது வரைக்கும் இல்லை, என்றார்.

Share This Article
Leave a review