கே.ஜெயக்குமார்
தொகுதி: திருவள்ளூர்
சார்ந்திருக்கும் கட்சி: இந்திய தேசிய காங்கிரஸ்
தந்தையின் பெயர்: ஸ்ரீ சி. குப்புசாமி
அம்மாவின் பெயர்: ஸ்ரீமதி. கே.அமிர்தம்மாள்
பிறந்த இடம்: பினையூர், காஞ்சிபுரம், தமிழ்நாடு
மகன்கள்:0
மகள்கள்:
மாநில பெயர்: தமிழ்நாடு
நிரந்தர முகவரி: பி-205, சர்வம் ஆப்ட்ஸ்., பள்ளிக்கரணை,
சென்னை -600100, தமிழ்நாடு
தொலைபேசி:
தற்போதைய முகவரியில்: 118, சவுத் அவென்யூ, புது தில்லி-110011
தொலைபேசி:
மின்னஞ்சல் முகவரி: dr_jayakumar@Hotmail.com
Dr.kjayakumar@sansad.nic.in
கல்வித் தகுதிகள்: BE (மெக். இன்ஜி.), எம். டெக். (மேலாண்மை), பிஜி டிப். RT&M மற்றும் Ind. Dev., Ph.D., MIE மெட்ராஸ் யுனிவர்சிட்டி, IIT மெட்ராஸ், Inst. இல் படித்தவர்.
சென்ற நாடுகள்:
ஆஸ்திரியா, பெல்ஜியம், கிரீஸ், ஐவரி கோஸ்ட், கென்யா, லிபியா, நெதர்லாந்து, யுகே, ஏமன், ஜிம்பாப்வே
மற்ற தகவல்:
நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்துள்ள இவர், காங்கிரஸ் கட்சியில் பல்வேறு தேசிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
15 ஆண்டுகள் தலைவர், TNCC மற்றும் AICC செயலாளர்.
தற்போதைய திருவள்ளூர் நாடாளுமன்றத் உறுப்பினர் இந்த தொகுதிக்கு நிறைய செய்துள்ளார் எங்களுடைய மிக நீண்ட நாள் கனவான மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வருவதில் அவருடைய பங்கு பெரிய அளவில் இருந்தது. மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தாலும் கூட அந்த மருத்துவக் கல்லூரியில் போதிய வசதிகள் இல்லை என்கிற குறை எங்களுக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. சென்னையை அடுத்து இருக்கிற தொகுதி திருவள்ளூர். பெரும்பாலும் பெரிய தேவைகளுக்கு சென்னையை நாடுகின்றனர் இந்த பகுதி மக்கள். அவற்றை சரி செய்யும் விதமாக சில தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. மேலும் இந்த பகுதியில் ஒரு மகளிர் கல்லூரி வேண்டும் என்று கேட்டிருந்தோம் நாடாளுமன்ற உறுப்பினரின் பெரும் முயற்சியால் அதுவும் நிறைவேற்றப்பட்டது.
அது மட்டுமல்லாமல் விரைவு ரயில் நிற்க வலியுறுத்தி வந்தோம் சுமார் பத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் சென்றாலும் கூட தற்போது நாடாளுமன்ற உறுப்பினரின் செயல்பாட்டால் இரண்டு விரைவு ரயில்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லுகின்றது. மேலும் 8 ரயில்கள் நிற்காமல் உள்ள நிலையில் அதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம். நாடாளுமன்ற உறுப்பினரால் என்ன செய்ய முடியுமோ அந்த அளவுக்கு செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினரை எளிதில் சந்திக்கிற வாய்ப்பு எப்போதும் உண்டு என்கிறார் அந்த தொகுதியைச் சேர்ந்த அப்துல் சலாம் என்பவர்.
அதே தொகுதியைச் சேர்ந்த கலைவாணி என்பவர் கூறும் போது. நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் சிறிதாக இருந்த மருத்துவமனையை விரிவு படுத்தி மருத்துவ கல்லூரியாக மாற்றினார். அதே போன்று இந்த பகுதியில் சாலை விரிவாக்க பணி அவர் மூலமாகத்தான் நடைபெற்றது. அது மட்டும் இல்லாமல் இந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார். அத்துடன் இந்த பகுதி மக்களின் மிகப்பெரிய கோரிக்கையாக இருப்பது ஒரு செவிலியர் கல்லூரி அதையும் செய்து கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும்.
அதேபோன்று வெளியூரில் இருந்து பணிக்கு வருகின்றவர்கள் தங்குவதற்கான விடுதி ஒன்றினை அதுவும் இலவசமான விடுதியாக அமைத்துக் கொடுத்தால் இந்த பகுதி மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என்று தெரிவித்தார். எந்த நேரத்திலும் தொலைபேசியில் அவரை தொடர்பு கொள்ளலாம் உடனடியாக அதற்கு பதில் அளிப்பார் என்றும் அவர் தெரிவித்தார். தான் தேர்தலில் நிற்கும் போது கொடுத்த வாக்குறுதிகளில் என்பது சதவீதம் நிறைவேற்றி இருப்பதாகவே கலைவாணி தெரிவித்தார்.
மேலும் அந்த தொகுதியைச் சார்ந்த தமிழ் வளவன் கூறுகின்ற போது நாடாளுமன்ற உறுப்பினர் அவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி வளர்ச்சி நிதியில் முழுமையாக செலவு செய்திருக்கிறார். பல நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கிறார். மேலும் சாலை வசதி ரயில்வே சுரங்கப்பாதை என பல திட்டங்களை இந்த பகுதியில் நிறைவேற்றியுள்ளார்.
எதிர்க்கட்சிகளை கூட அரவணைத்து செல்லக்கூடிய ஒரு உறுப்பினராகவே அவர் இருக்கிறார்.மேலும் இந்த பகுதியில் இருக்கின்ற ஒரு குறை என்னவென்று சொன்னால் படித்து இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு தான் ஒரு குறையாக இருந்து வருகிறது. அதற்காகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பல முயற்சிகளை மேற்கொண்டார், மேற்கொண்டு வருகிறார். மற்றபடி அவருக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை முழுமையாக செலவு செய்தார் என்று சொல்ல வேண்டும் என்கிறார்.
திருவள்ளூர் மக்களின் எதிர்பார்ப்பு என்பது அதிக அளவில் இருந்தாலும் கூட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை எவ்வாறு செலவு செய்வது எப்படி செலவு செய்வது என்று திட்டமிட்டு செலவு செய்திருக்கிறார். இந்த நாடாளுமன்ற உறுப்பினரை எளிதில் அணுக முடியும் அதுவே இவர்களுக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. மேலும் வேலைவாய்ப்பு போக்குவரத்து நெரிசல் ரயில் நிறுத்தம் என குறைகள் இருக்கத்தான் செய்கிறது. எதிர்வரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறவர்கள் அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பதே இந்த தொகுதி மக்களின் வேண்டுகோள்.