சொந்த அத்தையுடன் விதிமீறல்., ஒத்துழைக்கவில்லை.! ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

0
31
அகஸ்டின்

சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் கண்ணன் தெருவைச் சேர்ந்தவர் அன்பு (60). கூலித்தொழிலாளியான இவருக்கு வேளாங்கண்ணி (55) என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். பிள்ளைகள் இருவரும் வேலைக்கு செல்கின்றனர். இதனிடையே, நேற்று காலை வழக்கம் போல அன்பு மற்றும் அவரது பிள்ளைகள் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் மாலை 5 மணியளவில் அவர்களின் மகனான லாசர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர் கண்ட காட்சி அவரை அதிரச் செய்தது. வீட்டின் பெட்ரூமில் அவரது தாயார் வேளாங்கண்ணி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

காட்டிக்கொடுத்த சிசிடிவி:

இதுகுறித்த தகவலின் பேரில் போலீஸார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், வேளாங்கண்ணி கொலையாவதற்கு முன்பு சிலருக்கு டீ பரிமாறியதற்கான தடயங்கள் இருந்தன. மேலும் வீட்டில் இருந்த பணம், நகை ஏதும் கொள்ளை போகவில்லை. இதன் மூலம் கொலையாளிகள் வேளாங்கண்ணிக்கு அறிமுகமானவர்கள் என போலீஸார் யூகித்தனர். பின்னர் அந்தப் பகுதியில் சிசிடிவி காட்சியை பார்த்த போது அந்த வழியாக அன்று காலை வேளாங்கண்ணியின் தம்பி மகனான அகஸ்டின் அருண் (22) வந்தது தெரியவந்தது.

சொந்த அத்தை கொலை:

இதனிடையே, வேளாங்கண்ணியின் மரணம் குறித்து தெரியவந்ததால் அவரது தம்பியும், அவரின் மகன் அகஸ்டின் அருணும் அங்கு வந்திருந்தனர். இதையடுத்து, அகஸ்டின் அருணை தனியாக அழைத்துச் சென்ற போலீஸார், “இன்று காலை இங்கு வந்தாயா” எனக் கேட்டுள்ளனர். சிசிடிவி ஆதாரம் இருப்பது தெரியாத அகஸ்டின், “இங்கு வரவே இல்லையே” எனக் கூறினான். இதனைத் தொடர்ந்து, தங்களிடம் உள்ள சிசிடிவி ஆதாங்களை காட்டிய போலீஸார், அவனை தங்கள் பாணியில் விசாரித்தனர். இதில் அத்தை வேளாங்கண்ணியை கொலை செய்ததை அகஸ்டின் ஒப்புக்கொண்டான்.

திடுக்கிடும் வாக்குமூலம்:

வேளாங்கண்ணியை கொலை செய்தது குறித்து அகஸ்டின் கூறிய வாக்குமூலம் போலீஸாரையே திடுக்கிட வைத்தது.

அவன் போலீஸில் கூறிய வாக்குமூலம் வருமாறு:

நானும், எனது நண்பன் சாலமனும் தினமும் விதவிதமான ஆபாசப்படங்களை செல்போனில் பார்ப்போம். குறிப்பாக, திருமணமான பெண்களின் செக்ஸ் வீடியோக்களை விரும்பி பார்ப்போம். அடிக்கடி இந்த ஆபாசப் படங்களை பார்த்ததால் திருமணமான பெண்ணுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு வந்தது. அப்பொழுதுதான் எனது நினைவுக்கு அத்தை வேளாங்கண்ணி வந்தார்.

பலாத்காரம் செய்ய முயன்றேன்:

அவர் காலையில் வீட்டில் தனியாக இருப்பதால், நாங்கள் இருவரும் சேர்ந்து அவரை எங்கள் இச்சைக்கு இணங்க வைக்க முடிவு செய்தோம். அதன்படி, நானும் சாலமனும் நேற்று காலை அத்தை வீட்டுக்கு சென்றோம். எங்களுக்கு அவர் டீ கொடுத்தார். பின்னர் பெட்ரூமுக்கு சென்ற அவரை நான் பின்தொடர்ந்து சென்று அவரை
படுக்கையில் தள்ளி பலாத்காரம் செய்ய முயன்றேன். ஆனால் என்னை தள்ளிவிட்ட வேளாங்கண்ணி, “நான் உன் அத்தை. என்னையே பலாத்காரம் செய்ய முயல்கிறாயா, இரு உன் அப்பாவுக்கு போன் செய்கிறேன்” எனக் கத்தினார்.

கொலை செய்தேன்:

இதனால் பயந்து போன நான், அத்தை வேளாங்கண்ணியின் வாயை மூடி அங்குள்ள சுவரில் அவரது தலையை பலமாக பல முறை இடித்தேன். இதில் அவர் தலை உடைந்து ரத்தம் வந்தது. இருந்தாலும், தொடர்ந்து சுவரில் அவரது தலையை மோதிக் கொண்டே இருந்தேன். ஒருகட்டத்தில் அவர் இறந்துவிட்டார் என உறுதி செய்து நானும்,
சாலமனும் அங்கிருந்து சென்றுவிட்டோம். சிசிடிவியால் இப்போது மாட்டிக் கொண்டோம்” என அகஸ்டின் கூறினார். இந்த வாக்குமூலத்தின் பேரில் போலீஸார் அகஸ்டினையும், சாலமனையும் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here