சென்னையில் இருந்து கொல்லம் எக்ஸ்பிரஸ் செல்லும் ரயிலில் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு விருதாச்சலம் நோக்கி வந்து கொண்டிருந்த போது. உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பூ மாம்பாக்கம் என்ற இடத்தில் சென்னை திரிசூலம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார்.

இவரது மனைவி கஸ்தூரி (21). இவர்கள் குடும்பத்தினர் உடன் சங்கரன் கோவில் தாலுகா மெலநீலிய நல்லூர் கிராமத்திற்கு சென்றனர். அப்போது கர்ப்பிணி பெண் வாந்தி எடுப்பதற்காக ரயிலின் வாசல்படியின் அருகில் வந்து உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.

அதில் உடன் வந்த கணவர் மற்றும் அவரது உறவினர்கள் பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்த போது அந்த சங்கிலி வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் அடுத்த பெட்டியில் உள்ள அபாய சங்கிலி இழுத்து நிறுத்தி உள்ளனர்.

அதற்குள் அந்த ரயில் எட்டு கிலோமீட்டர் தூரம் கடந்து நின்றது. இரவு நேரம் என்பதால் கர்ப்பிணி பெண்ணை தேடுவதில் உறவினர்கள் நீண்ட நேரம் தேடியும் கிடைக்கவில்லை. மேலும் அங்கு வந்த இருப்பு பாதை போலிசார் உடலை கைப்பற்றி விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வுக்காக சேர்க்கப்பட்டனர்.

கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண் கீழே விழுந்து உயர்ந்த சம்பவம் அனைவரும் மத்தியில் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.