Viluppuram : ஒரே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 6 இளைஞர்கள் மீது வழக்கு..!

1 Min Read

விழுப்புரத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் 6 இளைஞர்கள் சென்ற சம்பவம் பொதுமக்களை அச்சப்படுத்திய இந்த சம்பவத்தில் 6 இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். பயணம் செய்த இரு சக்கர வாகனம் போலீசாரால் பறிமுதல்.

- Advertisement -
Ad imageAd image

கடந்த 2 ஆம் தேதி விழுப்புரத்தில் முக்கிய வீதிகளில் 6 இளைஞர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

ஒரே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 6 இளைஞர்கள் மீது வழக்கு

இந்த நிலையில் போலீசார் 6 இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து, தேடி வந்த நிலையில் நேற்று 3 நபர்களையும், இன்று 3 நபர்களையும் கைது செய்தனர்.

போலீசார் கைது செய்த இளைஞர்கள் மீது 3 பிரிவில் வழக்கு பதிவு செய்து அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 6 இளைஞர்கள் மீது வழக்கு

அதை தொடர்ந்து 6 நபர்களுக்கும் அறிவுரை கூறி காவல்துறையினர் ஜாமினில் விடுவித்தனர். மேலும் அதில் ஒரு சில மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையம்

விழுப்புரத்தில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இளம் கன்று பயம் அறியாது தான். அதற்காக இப்படியா ஒரே மோட்டார் சைக்கிளில் விபரீத பயணம் மேற்கொள்வது. கரணம் தப்பினால் மரணம் என்பதை உணராமல் ஒரே மோட்டார் சைக்கிளில் 6 இளைஞர்கள் பயணம் செய்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review