வேட்பாளர்கள்

விழுப்புரம் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 13வது தொகுதி ஆகும். இது 2008 ஆம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு பின்னர், புதிதாக உருவாக்கப்பட்ட மக்களவை தொகுதியாகும். இத்தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.தொகுதி மறுசீரமைப்பின்போது திண்டிவனம் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டது. அதற்குப் பதில் அதில் இருந்த பல தொகுதிகளை எடுத்தும், சில தொகுதிகளை சேர்த்தும் விழுப்புரம் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.

ரவிக்குமார்

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

திண்டிவனம் (தனி)
வானூர் (தனி)
விழுப்புரம்
விக்கிரவாண்டி
திருக்கோயிலூர்
உளுந்தூர்பேட்டை ஆகியன அடங்கும்

தமிழ்நாடு மாநிலத்தின் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியானது இந்திய அரசியலில் செல்வாக்கு மிக்க தொகுதியாகும். கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இந்த தொகுதி கடும் போட்டியை சந்தித்தது. திமுக-வின் வேட்பாளர் ரவிக்குமார் இந்த தேர்தலில் 5,59,585 வாக்குகளைப் பெற்று, 1,28,068 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 4,31,517 வாக்குகளைப் பெற்ற பாமக-வின் வடிவேலு இராவணனை ரவிக்குமார் தோற்கடித்தார்.

களஞ்சியம்

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி பலதரப்பட்ட மக்களை பிரதிபலிக்கும் தமிழ்நாடின் முக்கியமான தொகுதியாக உள்ளது. இந்தத் தொகுதியில் கடந்த 2019 ஆண்டில் 78.22 % வாக்குகள் பதிவாகியுள்ளன. தற்போது 2024 ஆண்டில், வாக்காளர்கள் தங்கள் தொகுதிக்கானவர்களை தேர்ந்தெடுக்க ஆர்வமாக இருக்கின்றனர். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 2024 வேட்பாளர்கள் பட்டியலைப் பொறுத்தவரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில்இருந்து பாக்கியராஜ் , நாம் தமிழர் கட்சியில்இருந்து இயக்குநர் மு.களஞ்சியம் , பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து முரளி சங்கர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில்இருந்து ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாவார்கள்.

இந்த தொகுதியை பொருத்தவரை முன்பு வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு உள்ளவராக தெரியவில்லை. மேலும், கூட்டனீயில் அவருக்கு பலமான எதிர்ப்பு இருப்பதை அறிய முடிகிறது. அது மட்டும் அல்லாமல் கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டவர் இந்த முறை பானை சின்னத்தில் போட்டியிடுகிறார் சின்னம் எந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம் பெற்றது என்பது சந்தேகமாக உள்ளது என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.

மேலும் எப்படியாவது தொகுதியை தக்க வைக்க வேண்டும் என்கிற முயற்சியில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தொடர்ந்து ரகசியமாகவே இயங்கி வருகிறார். அவர்களுக்கு கூடுதல் பலம் இரட்டை இலை சின்னம். கடந்த முறை தோல்வியை சந்தித்ததால் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்கிற இலக்கோடு அதிமுகவினர் பணியாற்றி உள்ளனர். மேலும் தேமுதிக கூடுதல் பலமாக இந்த கூட்டணிக்கு அமைந்தது எனலாம்.

வழக்கம்போல இளைஞர்களின் வாக்குகளை கவருகிற ஒரு கட்சியாக நாம் தமிழர் கட்சி இருந்து வருகிறது அந்த வகையில் இளைஞர்களின் பலம் நாம் தமிழர் கட்சிக்கு.வெற்றி யாருக்கு பொருத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here