வேலூர் மாவட்டம், அடுத்த பாகாயம் காவல் நிலையத்திற்கு அவசர எண் 100 மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் இது குறித்து காவல்துறையினர் உடனடியாக விசாரித்த பொழுது,
பாகாயம் பஸ் நிறுத்தத்திடம் சந்தேகப்படும் படியாக ஒருவர் உறவினரிடம் தகராறு செய்து கொண்டிருந்தவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்திய பொழுது, அந்த நபர் ஏற்கனவே பலமுறை சம்மந்தமில்லாமல் பாகாயம் காவல் நிலையத்திற்கு வந்து உட்கார்ந்து விட்டு தண்ணீர் குடித்து விட்டு செல்வார் என்பதை அறிந்து,

சந்தேகத்தின் பேரில் அவருடன் இருந்த அந்த நபரின் உறவினரிடம் போலீசார் விசாரித்த பொழுது அந்த உறவினர் கூறியது, தன்னுடைய செல்போனை வலுக்கட்டாயமாக வாங்கி 100 டயல் செய்து பாகாயம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தார் என்றும்,
அதனால் நான் அவரிடம் சண்டையிடுகிறேன் என்று கூறினார். உடனே இருவரையும் காவல் நிலையத்தில் அழைத்து விசாரித்த பொழுது அந்த நபர் சந்தோஷ் குமார் (28) பட்டதாரி வாலிபர் என்பதும் தெரியவந்தது.

அவரது அப்பா பெயர் பாண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் ஏற்கனவே திரைப்படங்களை கருத்து கணிப்பு செய்து வெளியிடுவார் என்றும், சினிமாவின் மீது அதிகமாக மோகத்தால் சினிமாவில் வருவது போலவே இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார் என்றும்,
கிருஷ்ணகிரியில் இருந்து பாகாயம் ஹெல்த் கேர் சென்டர் மருத்துவமனைக்கு தினமும் சிகிச்சைக்கு வந்து செல்ல முடியாததால் திருவண்ணாமலையில் தண்டராம்பட்டில் அவருடைய அக்கா வீட்டில் இருந்து தினமும் சிகிச்சைக்கு வந்து செல்கிறார் என்றும்,

ஆனால் மருத்துவர் இரண்டு மாதம் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். ஆனால் சந்தோஷ் குமார் தங்க முடியாது என்று மறுத்து விட்டு ரகளை செய்து அங்கிருந்து ஓடி வந்து பாகாயம் பேருந்து நிறுத்தத்திடம் வந்து உறவினரிடம் போன் கொடுக்கும்படி ரகளையில் ஈடுபட்டு உள்ளார்.
பின்னர் உறவினரிடம் போன் வாங்கி 100 டயல் செய்து பாகாயம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். உடனே இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் இவர் உண்மையாகவே மனநலம் பாதிக்கப்பட்டவரா அல்லது,

மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடிக்கிறாரா என விசாரிக்கும்படி உத்தரவிட்டார். இது குறித்து டிஎஸ்பி திருநாவுக்கரசு ஆகியோர் இளைஞர் மற்றும் அவரின் உறவினர் ஆகிய இருவரிடமும் விசாரணை செய்து வருகின்றனர்.