Vellore : பாதுகாப்பு மையத்தில் இருந்து 2 சிறார் குற்றவாளிகள் தப்பி ஓட்டம் – போலீசார் தீவிர தேடுதல் வேட்டை..!

1 Min Read

வேலூரில் அரசினர் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் இருந்து சிறார் குற்றவாளிகள் சுவர் ஏறி குதித்து தப்பி ஓட்டம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை தொடர்ந்து இந்த இல்லத்தில் இளம் சிறார்கள் தப்பி செல்வது தொடர் கதையாகியுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

வேலூர் மாவட்டம், வேலூர் காகிதபட்டறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் அரசினர் பாதுகாப்பு மையம் இங்கு செயல்பட்டு வருகிறது. அதில் இளம் குற்றவாளி சிறார்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

இதில் இந்த பாதுகாப்பு மையத்தில் இருந்த திருட்டு வழக்கில் கைதான விருதாச்சலத்தை சேர்ந்த சம்பத் திருட்டு வழக்கில் கைதான கோவையை சேர்ந்த அரிவிக்னேஷ் ஆகிய இருவரும் பாதுகாப்பு இல்லத்தின் சுவற்றில் ஏறி பின்பக்கமாக குதித்து தப்பி ஓடிவிட்டனர்.

2 சிறார் குற்றவாளிகள்

இதுகுறித்து வேலூர் வடக்கு காவல்துறையினர் தப்பி ஓடிய சிறார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். காவல்துறை அதிகாரிகளும் சிறார் மையத்தில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பாதுகாப்பு இல்லத்தில் அடிக்கடி தொடர்ந்து சிறார் குற்றவாளிகள் தப்பி செல்வது வாடிக்கையாகி உள்ளது.

பின்னர் காவல்துறையினர் அவர்களை கைது செய்து மீண்டும் கொண்டு வந்து பாதுகாப்பு இல்லத்தில் அடைப்பதும் தொடர்கதையாகியுள்ளது.

Share This Article
Leave a review