வால்பாறை நெடுஞ்சாலையில் பேருந்தை வழிமறித்த காட்டு யானை மெதுவாக நடந்து வந்த யானை வீடியோ வைரலாகி பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம், அடுத்த வால்பாறை பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் ஆழியார் பகுதியில் சாலையில் உலா வந்த காட்டு யானை பொள்ளாச்சியில் இருந்து வால்பாறையை நோக்கி வந்த TN:38.N:3442 பேருந்து.

இரவு பொள்ளாச்சியில் இருந்து வில்லோனியை நோக்கி வந்த போது ஆழியார் சோதனை சாவடி மற்றும் கவியருவி இடைப்பட்ட பகுதியில் வந்த போது எதிரே காட்டு யானை ஹாய்யாக சாலையில் நடந்து வந்ததை பார்த்த ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தியுள்ளார்.
அப்போது பேருந்தை நோக்கி வந்த காட்டு யானை பேருந்து சேதப்படுத்தாமல் சாலை ஓரமாக சென்றதால் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால் பயணிகள் அச்சத்திலும் பீதியில் பயணித்தனர்.

எனவே வனத்துறையினர் வால்பாறையை நோக்கி வரும் வாகனங்கள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும் எனவும் எச்சரிக்கை செய்தனர்.
மேலும் வனத்துறையினர் இரவு நேரங்களில் சாலையில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

வால்பாறை நெடுஞ்சாலையில் பேருந்தை வழிமறித்த காட்டு யானை சம்பவம் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.