நாடாளுமன்ற தேர்தலில் நிற்பது குறித்து முடிவு எடுக்கவில்லை – டி.டி.வி. தினகரன் பேட்டி..!

2 Min Read
டி.டி.வி. தினகரன்

வருகிற மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று ஆமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். கடைசி வரைக்கும் அமமுகவில் தான் இருப்பேன். நாடாளுமன்ற தேர்தலில் நிற்பது குறித்து முடிவு எடுக்கவில்லை என தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி.

- Advertisement -
Ad imageAd image

தஞ்சாவூர் மாவட்டம், அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் பத்து மாவட்டங்களில் உள்ள அமமுக சட்ட பேரவைத் தொகுதிகளின் பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்; வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி மாதத்தில் முடிவு செய்யப்படும். தஞ்சாவூர் மாவட்ட தொகுதியில் நான் நிற்பதாகக் கூறுவது ஊக அடிப்படையிலான தகவல். வருகிற தேர்தலில் நான் நிற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

டி.டி.வி. தினகரன்

நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க தனித்து போட்டியிட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். எடப்பாடி பழனிசாமி உள்ள கூட்டணியில் இடம் பெற வேண்டுமா என எங்கள் கட்சியினர் கேட்கின்றனர். அதனால் தனித்து நிற்பது சாலச்சிறந்தது என்ற முடிவை எடுக்கலாம். பழனிசாமி பச்சோந்தி மாதிரி. அவர் ஆட்சியில் இருக்கும் போது ஒரே நாடு, ஒரே தேர்தல் வேண்டாம் என்பார். இப்போது வேண்டும் என்பார். ஆனால் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லை. நாட்டின் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மத்திய அரசின் கடமை. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எம்.பி.க்களை இடை நீக்கம் செய்தது சரியான நடவடிக்கை இல்லை. இந்த நடவடிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

டி.டி.வி. தினகரன்

சென்னை பேரிடர் தொடர்பாக தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை. மாநில எல்லை தாண்டி தமிழகத்தில் நுழையும் காவிரி, பிலிகுண்டு வழியாக ஒகேனக்கல் அருவியை அடைகிறது. காவிரி என்பது தமிழ்நாட்டுக்கு ஜீவாதார பிரச்சனை. மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாகிவிடும். இது சட்டத்துக்கு புறம்பானது என்றார். மேலும் அதிமுக ஒன்றினைய வேண்டும் என்று எப்போதும் நான் கூறியதில்லை. அம்மாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து திமுக என்ற தீய சக்தியை எதிர்த்து போராட வேண்டும் என்று தான் கூறியுள்ளேன். உண்மையான அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைவார்கள்.

சுயநலவாதிகள், பதவி வெறி பிடித்தவர்கள், பணவெறி பிடித்தவர்கள் அதற்கு ஒத்துவர மாட்டார்கள். கடைசி வரைக்கும் நான் அமமுகவில் தான் இருப்பேன் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

Share This Article
Leave a review