பாஜகவில் இருந்து திருச்சி சூர்யா, கல்யாணராமன் அதிரடி நீக்கம்..!

2 Min Read

பாஜகவில் இருந்து திருச்சி S. சூர்யா அதிரடி நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் கல்யாணராமன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓராண்டு நீக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் திருச்சி சூர்யாவின் பேச்சு, நேர்காணல்கள் அடிக்கடி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்துள்ளது. தற்போது பாஜகவில் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக திருச்சி சூர்யா பொறுப்பு வகித்து வந்தார்.

பாஜக

இந்த நிலையில் தான் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து திருச்சி S.சூர்யா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில தலைவர் சாய் சுரேஷ் குமரேசன் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளர் திருச்சி S.சூர்யா கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும்,

கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்படுகிறார்.

திருச்சி சூர்யா

ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாஜகவில் மற்றொரு நிர்வாகி கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து ஓராண்டுக்கு நீக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக பாஜகவின் மாநில அலுவலக செயலாளர் சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் கல்யாணராமன் நடந்த முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு மாநில தலைமையினை பற்றியும்,

கட்சிக்காக பணியாற்றுபவர்கள் மீதும் தகுந்த ஆதாரங்கள் இன்றி சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி வருகிறார்.

கல்யாணராமன்

இது கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயலாக இருப்பதால் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின்படி கல்யாணராமன் கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரில் இருந்தும் 1 வருடத்திற்கு நீக்கப்படுகிறார்.

ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.” என கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a review