கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவை முன்னிட்டு விழ …

2 Min Read

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம் நகரில் குவிந்த திருநங்கைகள். ஆடல் பாடல் என கொண்டாடி மகிழும் திருநங்கைகள். விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் குவாகம் நிகழ்ச்சியில் முதலிடம் பிடித்த சென்னை திருநங்கை.

- Advertisement -
Ad imageAd image

உலகின் மூன்றாம் பாலினமாக கருதப்படும் திருநங்கைகள் தங்களது குலதெய்வமான கூத்தாண்டவர் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் வருகை புரிவது வழக்கம்.

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா

அந்த வகையில் விழுப்புரம் நகர வீதிகள் எங்கும் தங்களை ஒப்பனை செய்து கொண்டு பூச்சூடி வீதி உலா வருவார்கள் திருநங்கைகள். அது மட்டும் அல்லாமல் ஆடல், பாடல் என பல கலை நிகழ்ச்சிகளையும் நடத்துவார்கள் .

அந்த வகையில் இன்று விழுப்புரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் திருநங்கைகள் திருவிழா 2024 என்ற தலைப்பில் திருநங்கைகள் கலந்து கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.

மிஸ் குவாகம் நிகழ்ச்சி

 

இந்த நிகழ்வில் தமிழகத்தின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நடிகை அம்பிகா, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்வில் பேசிய பொன்முடி திருநங்கை என பெயர் சூட்டியவர் கலைஞர்.

திரு என்பது ஆண்களை குறிக்கும் நங்கை என்பது பெண்களை குறிக்கும் எனவே தான் மூன்றாம் பாலினத்தவரை திருநங்கை என அழைத்தார். திருநங்கைகள் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள்.

பொன்முடி, நடிகை அம்பிகா

சிலர் பிஎச்டி படிப்பது என்று சொன்னபோது மிகவும் பெருமையாக உள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கியவர் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

இதுதான் திராவிடம் மாடல் ஆட்சி. இயல், இசை, நாடகம், கல்வி என திருநங்கையை பார்த்து நாம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது என்று பேசினார்.

மிஸ் குவாகம் நிகழ்ச்சியில் விருது வழங்கிய திருநங்கைகள்

இந்த நிகழ்ச்சியில் திருநங்கைகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மிஸ் குவாகம் 2024 நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மூன்று திருநங்கைகள் இருந்தெடுக்கப்பட்டனர்.

முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சாம்ஜி, சென்னையைச் சேர்ந்தவர் இரண்டாவதாக வர்ஷா, புதுச்சேரியைச் சேர்ந்தவர் இவர் மருத்துவம் படித்து வருகிறார் மூன்றாவதாக சுபப்பிரியா. இவர் தூத்துக்குடி சேர்ந்தவர் மூன்று பேரும் கிரீடங்கள் சுடப்பட்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.

Share This Article
Leave a review