உளுந்தூர்பேட்டை மாவட்டத்தில் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த போது டயர் வெடித்து சாலையில் கார் கவிழ்ந்து சம்பவம். அப்போது காவலர், அவரது மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தாம்பரம் அருகே சங்கர் நகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் ஆறுமுகம் இவரது மகன் பாலமுருகன் வயது (32). இவர் தனது மனைவி வினோதினி வயது (30) என்பவருடன் காரில் கரூரில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு மீண்டும் சென்னைக்கு திரும்பினார்.

அப்போது காரை பாலமுருகன் ஓட்டி சென்றுள்ளார். அப்போது கார் உளுந்தூர்பேட்டை அருகே பாலி தமிழ்நாடு சிறப்பு காவல் படை பகுதியில் உள்ள மேம்பாலத்தில் சாலையில் சென்ற போது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது. பின்னர் டயர் வெடித்ததில் காரின் நிலை முன் தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. அப்போது எதிரே வந்த புதுச்சேரியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற மற்றொரு கார் நேருக்குநேர் மோதி விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் பாலமுருகன், அவருடைய மனைவி வினோதினி ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவர்களுக்கு தீவிர அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த விபத்துக்குள்ளான மற்றொரு காரில் சென்ற திருச்சி அருகே தொட்டியம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் வயது (67), கார்த்திக் வயது (42) வித்யா வயது (34), டிரைவர் பராசக்தி வயது (48) உள்ளிட்ட நான்கு பேர் படுகாயம் அடைந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து எடைக்கல் இன்ஸ்பெக்டர் குணபாலன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.