தஞ்சாவூர் அருகே இன்று சிறுவன் ஒருவருக்கு காதணி விழா நடைபெற இருந்த நிலையில், நீரில் மூழ்கி உயிரிழப்பு.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே இந்தளூர் மேலதிருவை சேர்ந்தவர் சுந்தர். இவரது மகன் சாய்ராம் வயது (14 ). இவர் வேங்கூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று இவருக்கு ஊரில் காதணி திருவிழா நடைபெற இருந்தது.

இதற்காக காலை எழுந்து தனது அண்ணன் முரளியுடன் இந்தளூர் பாலம் அருகில் உள்ள கல்லணை கால்வாயில் குளிக்க சென்றுள்ளார். அப்போது குளித்துக் கொண்டிருக்கும் பொழுது நீரோட்டத்தின் வேகம் காரணமாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.
தனது தம்பியை காப்பாற்றும் முயற்சியில் அண்ணன் ஈடுபட்டும் அவரால் முடியவில்லை. இதனால் கூச்சலிட்டு அருகில் இருந்த கிராம வாசிகளை உதவிக்கு அழைத்துள்ளார் . அவர்கள் எங்கு தேடியும் சாய்ராம் கிடைக்காததால் , அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் தீயணைப்பு துறையினரின் உதவியை நாட முடிவு செய்து.

இது குறித்து திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர் . தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு மாணவனின் உயிரற்ற சடலத்தை தான் தீயணைப்புத் துறையினரால் மீட்க முடிந்தது .
மேலும் சாய்ராமின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வியர்த்து வந்து விசாரணை மேற்கொண்டனர் . மீறும் அவரது உடலை உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
இன்று காதணி திருவிழா நடைபெற இருந்த நிலையில் மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொஞ்சம் இதையும் படிங்க: https://thenewscollect.com/madras-high-court-dismisses-senthil-balajis-plea-against-lower-courts-refusal-to-discharge-him-in-money-laundering-case/