- சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு திரும்ப பெறப்பட்டதை தள்ளுபடி செய்து , சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு .
- அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்த முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி மேல்முறையீடு .
- சாட்சிகளின் விசாரணை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கிவிட்டதால்
இந்த மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெறுவதாக செந்தில் பாலாஜி தரப்பில் தகவல் .

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய மனுவை திரும்ப பெறுவதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத் துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், மா.கவுதமன், சாட்சிகளின் விசாரணை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கிவிட்டதால் இந்த மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெறுவதாக கூறினார்.

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/diector-atlee-producer-archana-kalpathi-ordered-to-answer-in-bigil-story-script-theft-case/
அதாவது ஆகஸ்ட் 8, 2024 அன்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகவும், ஆகஸ்ட் 16 அன்று , ஒரு அரசு தரப்பு சாட்சி விசாரிக்கப்பட்டதாகவும், குறுக்கு விசாரணை நடந்து வருவதாகவும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவை திரும்ப பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.