சுடுகாடு கூட இல்லாமல் அவதிப்படும் கிராம மக்கள் வேலூரில் சோகம்

0
29
உயிரிழந்த ரேவதி

வேலூர் அருகே பாம்பு கடித்து உயிரிழந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய எடுத்து செல்ல போதிய சாலை வசதி இல்லாததால் ஆற்று நீரில் இறங்கி பிணத்தை சுமந்து செல்லும் அவல நிலை. தரைப்பாலம் அமைக்க வேண்டும் அல்லது மாற்று சுடுகாடு விரைந்து அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த நஞ்சுகொண்டாபுரம் ஊராட்சி, மேதலபாடி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களில் யாரேனும் இறந்தால் அவர்களின் சடலத்தை அடக்கம் செய்ய மேதலப்பாடி வழியாக செல்லும் நாகநதி ஆற்றை கடந்து  ஏரிக்கரையில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யவேண்டும்.

இந்த சுடுகாடு ஆற்றுக்கு மறு பகுதியில் உள்ளதால் மழைக்காலங்களில் ஆற்றில் அதிக அளவு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆற்றை கடந்து சடலத் எடுத்து செல்ல சிரமப்பட்டு வருகின்றன.

அதிக அளவு தண்ணீர் வரும் நேரங்களில்  இறந்தவர்கள் உடலை தண்ணீரில் மூழ்கியபடி தூக்கி சென்றும் அடக்கம் செய்கின்றனர். எனவே நாகநதி ஆற்றை கடந்து செல்ல தரைமட்ட பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

முன்னதாக மழைக்காலங்களில் யாரேனும் இருந்தால் ஆற்றைக் கடந்து செல்லாமல், ஆற்றுக்கு இந்த பக்கமே புதைக்க அரசு புறம்போக்கு இடத்தில் தற்காலிக சுடுகாடு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டதாகவும் சுடுகாடு அளவிடு பணி முழுமை பெறாததால் , தற்காலிக சுடுகாடு இன்று வரை பயன்பாட்டுக்கு வரவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இதனால் தற்போது ஆற்றில் செல்லும் தண்ணீரில் இறங்கியே உடலை சுடுகாட்டுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யும் அவல நிலையும் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் மேதலபாடி கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி ரேவதி (68) பாம்பு கடித்து உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் உடலை தோள் மீது சுமந்தபடி ஆற்றை சிரமத்துடன் கடந்து சென்று சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.  எனவே பொதுமக்கள் ஆற்றை கடந்து செல்ல தரைப்பாலம்  கட்டி தரும் வரை, தற்காலிக சுடுகாட்டை அளவீடு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here