விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 24 இடங்களில் ஆற்றுத்திருவிழா..!

2 Min Read

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஆற்றுத் திருவிழாவையொட்டி போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்க பட்டது. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழா கடந்த 14 ஆம் தேதி போகி பண்டிகையுடன் தொடங்கியது. பொங்கல், மாட்டுபொங்கல், காணும் பொங்கலை தொடர்ந்து 5-வது நாளான இன்று ஆற்றுத்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுகிறது.

- Advertisement -
Ad imageAd image

குறிப்பாக விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டுமே மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வரும் இந்த ஆற்று திருவிழாவானது, விவசாயத்துக்கும், குடிநீருக்கும் ஜீவாதாரணமாக விளங்கி வரும் ஆறுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி தை மாதத்தின் 5-ம் நாளான இன்று விழுப்புரம் மாவட்டத்தில் ஆற்று திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆற்றுத்திருவிழாவில் பொதுமக்கள்

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தென் பெண்ணையாறு, சங்கராபரணி ஆறு, மலட்டாறு, பம்பை ஆறு, வராக நதி ஆறு உள்ளிட்ட ஆறுகள் செல்லும் இடங்களில் சின்னக் கள்ளிப்பட்டு, பிடாகம், பில்லூர், அகரம், சித்தாமூர், அய்யூர் அகரம், அரகண்டநல்லூர், வீடூர், விக்கிரவாண்டி, குயிலாப் பாளையம் உள்ளிட்ட 24 இடங்களில் இந்த ஆற்றுத்திருவிழா நடக்கிறது.

நடைபெற்று வரும் இந்த ஆற்று திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள கோயில்களில் இருந்தும் மாட்டு வண்டி, டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் ஆற்று படுகைக்கு விநாயகர், முருகர், சிவன், பார்வதி, பெருமாள், காளி உள்ளிட்ட பல்வேறு சுவாமிகள் அழைத்து வரப்பட்டு அங்குள்ள ஆற்று நீரில் தீர்த்தவாரி செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.

ஆற்றுத்திருவிழாவில் பொதுமக்கள்

இந்த ஆற்று திருவிழாவில் பல்வேறு ஊர்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆறுகளுக்கு வந்திருந்து சுவாமிகளுக்கு செய்யப்பட்ட தீர்த்தவாரி நிகழ்ச்சிகளை தரிசனம் செய்து ஆற்று தண்ணீரில் விளையாடியும், ஆடிப்பாடியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள்.

இதனையொட்டி ஆற்றில் ராட்சத ஊஞ்சல் ரங்கராட்டினம் உள்ளிட்ட பொழுதுப்போக்கு விளையாட்டுக்களும், பொருட்களும் மற்றும் விற்பனை கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது. ஆற்று திருவிழாவையொட்டி எஸ்.பி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Share This Article
Leave a review