திருவள்ளூர் மாவட்டம், அடுத்த திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் தமிழ் கடவுள் ஆன இந்த திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற திருக்கோயிலாகும். திருத்தணியில் நகராட்சியில் மலைக்கோயில் அமைந்துள்ள இந்த திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை அனைத்தையும் இன்று திங்கட்கிழமை மலைக்கோயிலில் வசந்த மண்டபத்தில் என்னும் பணியில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

இந்த பணி உண்டியல் என்னும் பணி திருக்கோயில் பொறுப்பு அதிகாரி இணை ஆணையர் அருணாசலம் அவரது முன்னிலையில் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் திருக்கோயில் 2 பெண் பணியாளர்கள் உண்டியல் பணத்தை திருடும் சம்பவம் சிசிடிவி கட்சியில் பதிவாகியுள்ளது.
உண்டியல் எண்ண தொடங்கிய இரண்டு மணி நேரத்தில் இரண்டு பெண் பணியாளர்கள் திருடியதை உறுதி செய்த திருக்கோயில் அதிகாரிகள். பின்னர் திருத்தணி போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பெண் பணியாளர்களிடமிருந்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த 2 பெண் பணியாளர்கள் ஒருவர் திருத்தணி முருகன் கோயிலில் வேலை செய்யும் லோகநாதன் அவரது சகோதரி வைஜெயந்தி இவர், பணத்தை எண்ணுவது போல் உள்ளாடைக்குள் ரூபாய் 53190 ஆயிரம் பணத்தை திருடி உள்ளார்.
இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இவரது கூட்டாளியான திருக்கோயில் நிரந்தரப் பணியாளர் நாகசுரம் வாசிக்கும் தேன்மொழி இவர் பணத்தை உண்டியல் பணத்தை எண்ணும் பொழுது ரூபாய் 62600 ஆயிரம் பணத்தை திருடி உள்ளனர்.

இவர்கள் இருவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து, இந்த 2 பெண் பணியாளர்களையும் கைது செய்து, இவர்கள் எத்தனை நாள் இதுபோல் உண்டியல் பணம் என்னும் போது பணத்தை திருடி உள்ளனர் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருக்கோயில் அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் பெண் பணியாளர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் திருத்தணி முருகன் கோயில் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாதுகாப்பு அதிகப்படுத்த வேண்டும் கண்காணிப்பு கேமராவை மேலும் அதிகரிபடுத்த வேண்டும் என்று முருகன் கோயில் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.