சேலத்தில் அடுத்தடுத்து மூன்று ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை. இரண்டு ஆசிரியர்கள் கைது ஒருவர் பணியில் இருந்து விடுவித்து துறை ரீதியாக நடவடிக்கை.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் தனியார் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தில் தற்பொழுது பிளஸ் ஒன் பிளஸ் டூ மாணவிகள் அரசு பொது தேர்வு எழுதி வருகின்றனர்.

பிளஸ் 1 மொழி தேர்வின் போது எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மாரிமுத்து தேர்வு அறை கண்காணிப்பாளராக பணியில் இருந்து உள்ளார். தேர்வு நடந்த பொழுது தேர்வு அறையில் பிளஸ் ஒன் மாணவி ஒருவரிடம் ஆசிரியர் மாரிமுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனால் அந்த மாணவி தேர்வை சரிவர எழுத முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இது பற்றி மாணவி பெற்றோரிடம் புகார் கூறினார். பெற்றோர்கள் சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலர் சந்தித்து புகார் அளித்தனர்.

அதன் பெயரில் முதன்மை கல்வி அலுவலர் கபீர் விசாரணை நடத்தி புகார் கூறப்பட்ட தேர்வரை கண்காணிப்பாளர் மாரிமுத்துவை தேர்வு பணியில் இருந்து விடுவித்து நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த சம்பவம் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே புதுப்பாளையம் ஊராட்சி அரிசி பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 350 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இங்கு கொங்கணாபுரம் அருகே பாஞ்சாலியூரை சேர்ந்த பழனியப்பன் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக மாணவிகள் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
பெற்றோர்கள் கொங்கணாபுரம் போலீசில் பழனியப்பன் மீது புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர் விசாரணையில் ஆசிரியர் பழனியப்பன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தெரியவந்தது.

உடனே போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பழனியப்பனை போலீசார் கைது செய்தனர். இதேபோல ஓமலூர் அருகே தாரமங்கலம் கந்தம்பிச்சனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர் ராதாகிருஷ்ணன்.
இவர் ஏழாம் வகுப்பு மாணவியை கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாணவி பெற்றோரிடம் கூறினார். உடனே சக மாணவிகளை பெற்றோர்கள் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்பொழுது தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் மீது துரை ரீதியாக நடவடிக்கையாக பணியிட நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து பெற்றோர்கள் அவரை கைது செய்ய கோரிக்கை வைத்து வந்தனர்.

சேலத்தில் அடுத்தடுத்து மூன்று ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – 2 ஆசிரியர்கள் கைது
தொடர்ந்து ஓமலூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் புகார் அளித்த நிலையில் புகாரின் பேரில் போலீசார் தலைமை ஆசிரியரை கைது செய்து, சேலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
சேலம் மாவட்டத்தில் அடுத்தடுத்து மாணவிகளிடம் பாலியல் செயல்களில் ஈடுபட்ட இரண்டு ஆசிரியர்கள் கைது ஒருவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.