மீண்டும் பாஜகவை ஆட்சியில் அமைத்தால் இதுதான் கடைசி தேர்தலாக இருக்க கூடும் – கி.வீரமணி பேச்சு..!

2 Min Read

மீண்டும் பாஜகவை ஆட்சியில் அமைத்தால் இதுதான் கடைசி தேர்தலாக இருக்க கூடும் இது குறித்துகி.வீரமணி பேச்சு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

- Advertisement -
Ad imageAd image

திராவிடர் கழகம் தேர்தலில் நிற்காமல் இருந்தாலும், வருகிற மக்களவை தேர்தலில் யார் வர வேண்டும் யார் வரக்கூடாது என்ற அடிப்படை தத்துவத்தை மக்கள் மத்தியிலே பிரச்சாரத்தை தெளிவாக செய்யக்கூடிய வகையில் திராவிடர் கழகம் ஈடுபட்டுள்ளது.

கி.வீரமணி

ஜனநாயக நாட்டில் வரையறுக்கப்பட்ட இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு ஆகிய 5 அம்சங்களையும் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்ககூடிய மோடி அரசு ஒவ்வொன்றாக சிதைத்து வருகிறது.

ஜனநாயகமே காணாமல் போய்விடும் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இந்த தேர்தலிலேயே மீண்டும் பாஜகவை ஆட்சியில் அமைத்தால் இதுதான் கடைசி தேர்தலாக இருக்க கூடும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது.

கி.வீரமணி

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி என்பது கொள்கை கூட்டணி, மற்ற கட்சிகள் திணறிக் கொண்டிருக்கும் நேரத்தில், திமுக கூட்டணி என்பது வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்கிறது.

எனவே இண்டியா கூட்டணி என்பது வரக்கூடிய ஆட்சி இந்த கூட்டணியின் ஆட்சியாக தான் இருக்கும். வடகிழக்கு மாநிலங்களில் பாஜக தேர்தலில் நிற்கவில்லை. இந்தியா முழுவதும் எங்களிடம் தான் உள்ளது எனக்கூறும் பாஜக ஏன், அந்த மாநிலங்களில் நிற்கவில்லை.

கி.வீரமணி

அப்போது வேட்பாளர்கள் இல்லையா அல்லது போட்டியிட துணிவு இல்லையா. இந்தியா முழுவதும் எதிர்கட்சிகள் அமைதியாக தங்கள் பணியை செய்து வருகின்றனர். பெரிய அளவில் வெற்றியையும் பெறுவார்கள்.

தமிழகத்தில் வருகிற 2ம் தேதி முதல் 17ம் தேதி வரை நான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளேன். மக்கள் விரோத பாஜக அரசு ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் என புத்தகங்கள் வாயிலாகவும் நாங்கள் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளோம்.

கி.வீரமணி

மோடி ஆட்சியின் ஏதேச்சதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், யாருக்கு வாக்களித்தால் அதை செய்ய முடியுமோ, அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். பிரதமர் அடிக்கடி தமிழகத்து வர வேண்டும், அப்படி வந்தால் எதிர்கட்சிகளுக்கு நல்ல வெற்றி வாய்ப்பு அதிகம்.

திமுக கூட்டணி வெற்றி பெற ஒவ்வொரு முறையும் மோடி இங்கு வந்து உரம் போடுகிறார்.

கி.வீரமணி

பாஜக அரசு ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதி என்னாச்சு, விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி தான் விவசாயிகள் போராடி வருகிறார்கள். அவர்களை நெருக்கடி காலத்தில் ஒடுக்கியது போன்று ஒடுக்கி வருகிறார்கள். இதற்கான விடை விரைவில் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a review