காலம் கடந்தும் மனித இனத்தின் உந்து சக்தி இந்த கலாம்., நம் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்.!

0
80
ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்.

2015ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி சில்லாங்கில் உள்ள IIM-ல் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மத்தியில் தன் அழகு சிரிப்பை உதிர்த்து கொண்டே உரையாற்றி கொண்டிருந்தார் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம். திடீரென்று நெஞ்சில் கையை வைத்து கொண்டே மேடையில் சரிகிறார். அடுத்த சில மணிநேரம் பதைபதைப்பை உண்டாக்க கூடியது. அவரை சோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டார். அவரின் இறப்பு செய்தி இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே பேரதிர்ச்சி.

கடைக்கோடியில் இருந்து 1931ம் ஆண்டு 15 அக்டோபர் மாதம் ராமேஸ்வரத்தில் ஏழை இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் தனது கடின உழைப்பாலும், கல்வியாலும் உயர்ந்து இந்தியாவின் உயர்ந்த பதவியான குடியரசு தலைவராக உயர்ந்தவர்.


சிறுவயதில் பேப்பர் விநியோகிக்கும் பணியை செய்து கொண்டே தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் 1954ம் ஆண்டு இயற்பியல் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர், சென்னை எம்ஐடி-யில் விண்வெளி பொறியியல் படிப்பையும் முடித்தார்.

பின்னர் 1960ம் ஆண்டு DRDO-வில் அடிப்படை விஞ்ஞானியாக தனது பணிக்காலத்தை துவங்கிய கலாம் படிப்படியாக முன்னேறி இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானியாக அவதானித்தார். ரோகிணி 1 என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவி இந்தியாவை விண்வெளி ஆராய்ச்சியில் உலக அரங்கில் தலைநிமிர செய்தார். இந்தியாவின் 5 அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றியுள்ள அப்துல் கலாம் இந்திய அணுசக்தி நாயகன் என்றும் அழைக்கப்படுகிறார்.

எடை குறைவான செயற்கை கால் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல கண்டுபிடிப்புகளையும் உருவாகியுள்ள அப்துல் கலாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான தலைவர்களின் ஒருவர் ஆவார். 2002ம் ஆண்டு குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட்டு ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். இவரது ஆட்சிக்காலத்தில் பல்வேறு சிறந்த உரைகளையும் இவர் ஆற்றியுள்ளார்.

மயிர் கூச்செரியும் உரைகள் நிகழ்த்துவது, உந்தி தள்ளும் புத்தகங்களை எழுதுவது என சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராக திகழ்ந்தவர் அப்துல் காலம். இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம பூஷன், பத்ம விபூஷண், பாரத ரத்னா உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் வாங்கியுள்ளார் இவர்.

இந்தியாவின் கடைக்கோடியில் பிறந்த நாட்டின் தலைமகனாக உருவெடுத்த ஏபிஜெ. அப்துல்கலாம் காலங்கள் 2015ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தி கொண்டிருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
தன்னுடைய வாழ்நாளின் இறுதி மூச்சு வரை மக்களுக்கான சேவையில் இருந்து இறந்த ஒரு சில தலைவர்களில் ஒருவரான கலாம் காலங்கள் கடந்தும் மனித இனத்தின் உந்து சக்தியாக இருப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here