அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அந்நாட்டின் பொருளாதாரம், வர்த்தகத்தை கடுமையாக பாதித்து வரும் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர, தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.25 முதல் 5.5 சதவீதம் வரையில் வைத்துள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ்-ன் பென்ச்மார்க் வட்டி விகிதம் என்றால் கிட்டத்தட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் போன்றது, இந்த பென்ச்மார்க் வட்டி விகிதத்தை அடிப்படையாக கொண்டு தான் அனைத்து கடனுக்கான வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை மிகுந்த தாமதத்துடன் உயர்த்தியுள்ளது, இது ஏற்கனவே கடுமையாக பாதித்துள்ள அமெரிக்க நுகர்வோர் சந்தையை கூடுதலாக பாதிக்க உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் அமெரிக்க பெடர்ல் ரிசர்வ் 2001க்கு பின்பு அதிகப்படியாக 5.25 – 5.5 சதவீதம் வரையில் வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது.
இதன் வட்டி விகித உயர்வு மூலம் அமெரிக்காவின் பணவீக்கத்தை 2 சதவீதம் என தனது இலக்கிற்கு கொண்டு வர முடியும் என பெடரல் ரிசர்வ் நம்புகிறது. இது மட்டும் அல்லாமல் பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் இனி வரும் காலத்திலும் வட்டி விகித உயர்வு இருக்க கூடும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் செப்டம்பர் மாத கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்படாது என கடந்த FOMC அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க பெடரல் ரிசர்வ்-ன் முடிவை தொடர்ந்து அடுத்து பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவும் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்தும்.
இதன் மூலம் வல்லரசு நாடுகளில் கடனுக்கான வட்டி விகிதம் குறைந்து மக்கள் செலவு செய்யும் அளவுகளை குறைக்கும். பெரிய நிறுவனங்கள் புதிய திட்டத்திற்கான முதலீட்டை குறைக்கும்,
இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்தியாவும் இந்திய நிறுவனங்களும் பாதிக்கப்படும். இதனால் இந்திய பங்குச்சந்தையில் இருந்து அடுத்த சில நாட்களில் இருந்து முதலீடுகள் வெளியேற வாய்ப்பு உள்ளது. இதேபோல் தங்கம் விலையிலும் அதிகப்படியான தடுமாற்றம் அடுத்த சில நாட்களுக்கு இருக்கும், இன்று காலை வர்த்தகத்திலேயே சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1970 டாலரில் இருந்து 1980 டாலர் வரையில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.