திருத்தணியில் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1195 போதை மாத்திரைகள், இரண்டு கத்தி, இரண்டு செல்போன் உள்பட அனைத்தையும் பறிமுதல் செய்து, 4 வாலிபர்கள் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், அடுத்த திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு பேருந்து ஏற சென்ற 4 இளைஞர்களை சந்தேகத்தின் பெயரில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை போலீசார் பிடித்து சோதனை மேற்கொண்டனர்.

விசாரணையில் போதை மாத்திரைகளை மும்பையில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மும்பையில் இருந்து ரயில் மூலமாக போதை மாத்திரை வாங்கி வந்து சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதியில் விற்பனை செய்து வந்ததாக தெரியவந்தது.

அவர்களிடமிருந்து ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான 1195 போதை மாத்திரைகளையும், இரண்டு பட்டாகத்திகள், 2 செல்போன்கள், 4 போதை ஊசிகள், ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

போதை மாத்திரை கடத்தல் ஈடுபட்ட திருவள்ளூர் பகுதியை சேர்ந்த தயாளன், மோனிஷ் குமார், ஆகியோர்களை திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைத்து இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.

இதேபோல், சென்னை கண்ணகி நகர் சேர்ந்த யுவராஜ் மற்றும் மோகன் ஆகிய 2 பேரை திருத்தணி மதுவிலக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.

மேற்கண்ட மும்பையில் இருந்து 4 பேர் போதை மாத்திரைகள் கடத்தி வந்த இவர்கள் மீது இரண்டு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிபதி உத்தரவின் பேரில் 4 இளைஞர்களையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 8 லட்ச ரூபாய் மதிப்புடைய போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, திருத்தணியில் 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.