பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல எந்த தடையும் இருக்காது – அமைச்சர் சிவசங்கர்..!

2 Min Read
பாஜக என்ற முதலாளியின் சொல்லிற்கு அதிமுக கட்டுப்படுகிறது - போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களுக்கு எந்த தடையும் இருக்காது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார். மணல் குவாரி கலவர வழக்கில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், நேற்று கடலுார் கோர்ட்டில் ஆஜரானார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இது கடந்த 2015 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட பொய் வழக்கு. சட்டப்படி நீதிமன்றத்தில் உரிய முறையில் எதிர்கொள்வோம்.

- Advertisement -
Ad imageAd image

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை கடந்த ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முழுமையாக நிறைவேற்றி உள்ளோம். அதில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் கோரிக்கை மட்டும் நிலுவையில் உள்ளது. முதல்வர் வழங்கும் நிதி தான் போக்குவரத்து துறை சிறப்பாக செயல்படுவதற்கு காரணமாக உள்ளது. மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம், மாணவர்களுக்கு இலவச பேருந்து அட்டை, டீசல் மானியம் போன்ற நிதியின் மூலம் தான் போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் போட முடிகிறது.

அமைச்சர் சிவசங்கர்

அதுபோல பக்கத்தில் இருக்கும் கேரளாவிலோ, ஆந்திராவிலோ எத்தனை மாதத்துக்கு ஒரு முறை சம்பளம் போடுகிறார்கள் என விசாரித்தால் அறிவார்கள். இது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இந்த துறை சீரழிந்து கிடந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த போதும், மற்ற மாநிலங்களில் போக்குவரத்து கட்டணம் உயர்ந்த போதும் நமது மாநிலத்தில் உயர்த்தவில்லை. பொங்கல் பண்டிகை நெருங்க, நெருங்க காத்திருப்போர் பட்டியல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதனால், பெரும்பாலானவர்களுக்கு டிக்கெட் கன்பார்ம் ஆகுமா? என்ற கவலை இப்போதே தொற்ற தொடங்கியுள்ளது. இதனால், அவர்கள் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கையில் இறங்கலாம் என்று யோசித்து வருகின்றனர். ஏனென்றால் ரயிலில் தான் டிக்கெட் கட்டணம் குறைவு, குடும்பத்துடன் செல்ல சவுகரியமாக இருக்கும்.

அமைச்சர் சிவசங்கர்

பொங்கல் பண்டிகை நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் இந்த போராட்டத்தை நடத்தக் கூடாது என்பது தான் எனது வேண்டுகோள். பொங்கலுக்கு பிறகு அவர்களுடன் பேசுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். பொங்கல் பண்டிகை பிறகு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து பேருந்துகளும் முழுமையாக இயக்கப்படும்.

அதனால் ஓய்வு ஊதியர்களுக்கான அகவிலைப்படி, கடந்த அதிமுக ஆட்சி காலத்திலிருந்து வழங்கவில்லை. அவர்கள் ஆட்சியில் நிறுத்தி விட்டு இப்போது திமுக ஆட்சியில் அந்த சுமையை தூக்கி வைப்பதற்கு அதிமுக அரசியல் நாடகம் போடுகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல எந்த தடையும் இருக்காது. இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

Share This Article
Leave a review