2024 பொதுத் தேர்தலின் மூன்றாம் கட்ட வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

0
20
மக்களவை தேர்தல்

2024 பொதுத் தேர்தலின் மூன்றாம் கட்ட வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. மக்களவை பொதுத் தேர்தலில் 12 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான அறிவிக்கை நாளை (12.04.2024) வெளியிடப்படும். இதனிடையே, மத்திய பிரதேசத்தில் ஒத்திவைக்கப்பட்ட பெதுல் தொகுதி தேர்தலுக்கான அறிவிப்பும் நாளை வெளியிடப்படும்.

இந்த 94 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும், மத்தியப் பிரதேசத்தின் பெதுல் (எஸ்டி) தொகுதியில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தலும் 07.05.2024 அன்று நடைபெறும். மத்திய பிரதேசத்தில் 2-வது கட்டமாக நடைபெறவிருந்த பெதுல் (எஸ்டி) தொகுதிக்கான தேர்தல் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மரணம் அடைந்ததால் ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவை தேர்தல்

அசாம், பீகார், சத்தீஸ்கர், தாத்ரா & நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, கோவா, குஜராத், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை மூன்றாம் கட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் ஆகும்.

மூன்றாம் கட்டத்திற்கான அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

அறிவிக்கை வெளியீடு- வேட்பு மனுதாக்கல் துவக்கம் – 2024 ஏப்ரல் 12

வேட்பு மனுதாக்கலுக்கு கடைசி நாள் – 2024 ஏப்ரல் 19

வேட்பு மனுக்கள் பரிசீலனை – 2024 ஏப்ரல் 20

மனுக்களை விலக்கிக் கொள்ள கடைசி நாள் – 2024 ஏப்ரல் 22

வாக்குப்பதிவு நாள் – 2024 மே 7

வாக்கு எண்ணிக்கை – 2024 ஜூன் 4

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here