பாஜக அரசை வீழ்த்துவதே ஒற்றை இலக்கு என்ற மைய கருத்துடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலுக்கான விசிக தேர்தல் அறிக்கையை அந்த கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செவ்வாயன்று (ஏப். 9) அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பட்டினத்தில் வெளியிட்டார். தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.

பாஜக அரசை வீழ்த்துவது தான் ஒற்றை இலக்கு – தொல். திருமாவளவன்

அப்போது, தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து பேசிய தொல். திருமாவளவன், “பாஜகவுக்கு எதிரான திமுகவின் முயற்சிக்கு விசிக துணை நிற்கும். பாஜக அரசை வீழ்த்துவது தான் ஒற்றை இலக்கு. தேசிய மனித உழைப்பு நேரம், மதிப்புக் கொள்கையை வலியுறுத்துவோம்.

அப்போது வறுமைக்கோடு உச்சவரம்பை உயர்த்துவோம். மேலும் 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தை 200 நாட்களுக்கு விரிவுபடுத்துவோம். ஜிஎஸ்டி-யை ஒழிக்க குரல் கொடுப்போம்.

பாஜக

விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போன்ற அனைவருக்குமான நலனை முன்னிறுத்தும் திட்டங்களே விசிக தேர்தல் அறிக்கையின் முக்கியத்துவம்” என்றார். மேலும் அவர் பேசுகையில்;-

தான் முதன்முதலாக மக்களவை உறுப்பினராக இருந்த போது பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு உச்சவரம்பை உயர்த்த குரல் கொடுத்ததையும் அகில இந்திய மருத்துவ இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய குரல் கொடுத்ததையும் நினைவு கூர்ந்தார்.

பிரதமர் மோடி

ராமர் கோவில் கட்டியதில் நடந்த ஊழல் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த வலியுறுத்துவோம். ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும், ஆளுநரை பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்க கூடாது. இந்தியா முழுவதும் தமிழ் செம்மொழி வாரம் கொண்டாடப்பட வேண்டும்.

அப்போது 65 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம். தலித் மற்றும் பழங்குடியினருக்கு தனி வங்கி திட்டம். மேலும் ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம். அனைத்து மொழிகளிலும் அம்பேத்கர் நூல்கள், அம்பேத்கர் பிறந்த நாளை அறிவுத்திருநாளாக அறிவிக்க குரல் கொடுப்போம்.

திமுக

தேர்தல் சீர்திருத்தம் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிர்ப்பு தெரிவிப்போம். தேர்தல் ஆணையர் நியமன சட்டம் ரத்து, வாக்குப்பதிவு முறைக்கு பதிலாக பழையபடி வாக்குத்தாள் முறை, விகிதாச்சார பிரதிநிதித்துவம், தொகுதி மறுசீரமைப்பில் தென்னிந்திய மாநிலங்களின் பாதுகாப்பு, தேவையற்ற தேர்தல் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்.

விசிக

வருமான வரி சீரமைப்பு, விவசாயக்கடன் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துவோம்.

அனைவருக்கும் வீடு ராணுவத்தின் நிதியை குறைத்து கல்விக்கான நிதியை அதிகரிக்க வேண்டும், நீதித்துறையில் இட ஒதுக்கீடு, தனியார் துறையில் இட ஒதுக்கீடு, சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு, அனைவருக்கும் வீடு அடிப்படை உரிமை, மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை ஒழிக்க வேண்டும்.

தொல். திருமாவளவன்

தலித் கிறிஸ்தவர்களை பட்டியலில் இணைக்க வேண்டும், மீனவர்களுக்கு தனி அமைச்சகம், மதச் சிறுபான்மையினருக்கான தனி அமைச்சகம், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பிரதிநிதித்துவம், நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும். இத்துடன் இன்னும் பல அம்சங்கள் விசிக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here