ஜல்லிக்கட்டு தீர்ப்பு பீட்டா நிறுவனத்திற்கு கிடைத்த வெற்றி என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது முகநூல் பதிவில்,”ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்று 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு ஒருமித்த தீர்ப்பு வழங்கியதை வரவேற்கின்றேன்.
உச்சநீதிமன்றம் தடை விதிக்க வேண்டுமென்று கடுமையாக முயற்சி செய்த பீட்டா நிறுவனத்தின் வாதத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு நடத்திய சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றியாக பார்க்கின்றேன்.
தமிழ்நாடு அரசின் சிறப்பான வாதம் நீதிபதிகளை கவர்ந்தது என்று சொல்லியுள்ளனர்.மானமும், வீரமும் மறத்தமிழனின் அடையாளமாகும். தமிழ்நாட்டின் வரலாற்றில் ஜல்லிக்கட்டுக்கு என்று தனியிடம் உண்டு. அது நமது பண்பாட்டுடன் கலந்த ஒன்றாகும்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்றுத் தந்த தமிழ்நாடு அரசுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க அண்ணாமலை அறிக்கையில்.
ஜூலை 11, 2011 அன்று, காங்கிரஸ், திமுக கூட்டணி அரசின் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த திரு ஜெய்ராம் ரமேஷ் அவர்கள், ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.
பின்னர் 2014ஆம் ஆண்டு மே மாதம், உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு மீதான தடையை உறுதி செய்தபோது,
ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் அந்தத் தீர்ப்பை வரவேற்று, “காட்டுமிராண்டித்தனமான விளையாட்டு முடிவுக்கு வந்துவிட்டது” என்று கூறினார்.
2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், முன்னாள் பிரதமரும், அப்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான திரு மன்மோகன் சிங், ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுக்களைக் கைவிடுவது நன்று என்று மனிதநேய சங்கம் ஒன்றின் கடிதத்திற்குப் பதிலளித்தார்.என்று தெரிவித்துள்ளார்.