பா.ஜ.க மகளிர் அணியின் செயலாளரை வீடுபுகுந்து மண்டையை உடைத்த, பா.ஜ.க மகளிர் அணி தலைவி..!

2 Min Read

தஞ்சை மாவட்ட பா.ஜ.க மகளிர் அணியின் செயலாளரை வீடுபுகுந்து உள்ளே நுழைந்து மண்டையை உடைத்த, தஞ்சை பா.ஜ.க மகளிர் அணி தலைவி தஞ்சை மாவட்ட பா.ஜ.க-வினரிடையே பதவி சண்டை காரணமாக தன்னை தாக்கி விட்டு தலைமறைவான தஞ்சை மாவட்ட மகளிர் அணி தலைவி கவிதாவை கைது செய்து நடவடிக்கை எடுத்திட தஞ்சை எஸ்.பி-யிடம் பாதிக்கப்பட்ட ஜெகதீஸ்வரி புகார். அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -
Ad imageAd image
பா.ஜ.க மகளிர் அணியின் செயலாளரை வீடுபுகுந்து மண்டையை உடைத்த, பா.ஜ.க மகளிர் அணி தலைவி

அப்போது பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெகதீஸ்வரி கூறுகையில்;- தஞ்சை மாவட்ட பா.ஜ.க மகளிர் அணியின் செயலாளராக இருப்பவர் ஜெகதீஸ்வரி. இவர்கள் இவருக்கும் பா.ஜ.க-வினரிடையே பதவி சண்டை காரணமாக தஞ்சை மாவட்ட மகளிர் அணியின் தலைவியாக இருந்த கவிதா-விற்கும் ஏற்கனவே சிறிய பிரச்சனை ஏற்பட்டது. அப்போது இருவருக்கு முன்விரோதம் ஏற்பட்டது. அப்போது இருவருக்கு அடிக்கடி பதவி அதிகார தகராறு ஏற்பட்ட கொண்டிருந்த நிலையில் பகை ஏற்பட்டது.

பா.ஜ.க மகளிர் அணியின் செயலாளர் ஜெகதீஸ்வரி

அப்போது பொங்கலன்று கவிதா ஜெகதீஸ்வரியை எப்படியாவது அடிக்க வேண்டும் என்று சில இளைஞர்கள் சிலரோடு திட்டமிட்டு, அப்போது கவிதா ஜெகதீஸ்வரியின் வீடுபுகுந்து உள்ளே நுழைந்து அவரை தகாத வார்த்தைகளால் வசைபாடி நீ என்ன என்னோட பெரிய ஆளா என்றெல்லாம் கத்தி காட்டி ஜெகதீஸ்வரியை மிரட்டிய போது அவரை மண்டையில் தாக்கி அப்போது ஜெகதீஸ்வரி ரத்தம் வெள்ளத்தில் கிழே விழுந்தார். பின்னர் கவிதாவும் அவருடன் வந்த சில இளைஞரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

கவிதாவை பாஜக கட்சியில் நீக்கம்

பின்னர் இதனை கண்ட அக்கம் பக்கத்தினர்கள் ரத்த வெள்ளத்தில் இருந்த ஜெகதீஸ்வரியை மீட்டு தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு மண்டையில் 10 தையல் போடப்பட்டது. அப்போது பாதிக்கப்பட்ட ஜெகதீஸ்வரி கூறுகையில்;- தான் பி.எச்.டி வரை படித்துள்ளதால் பாஜக கட்சியில் நிர்வாகிகள் என்னை மதிப்பார்கள்.

பா.ஜ.க மகளிர் அணியின் செயலாளர் ஜெகதீஸ்வரி

அதனை பொறுத்து கொள்ள முடியாத கவிதா அடிக்கடி என்னிடம் தகராறு செய்வார். மேலும் பொங்கலன்று வீடுபுகுத்து உள்ளே நுழைந்து என்னை அடித்ததில் மண்டையில் பெரிய காயம் ஏற்பட்டது. ஏற்பட்ட காயத்தில் 10 தையல்போடும் நிலை ஏற்பட்டது. அப்போது செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு தலைமறைவாகி உள்ள கவிதாவை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி தஞ்சை எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட ஜெகதீஸ்வரி தெரிவித்தார்.

Share This Article
Leave a review