பழுதடைந்த பாலத்தை 5 ஆண்டுகளாக சீரமைக்காத அரசு நிர்வாகம்..!

2 Min Read

கோவை மாவட்டம், பழுதடைந்த பாலத்தை 5 ஆண்டுகளாக சீரமைக்காத அரசு நிர்வாகத்தை கண்டித்து கருப்பு கொடியுடன் கண்ணீர் பேணர் வைத்த குரும்பனூர் கிராம மக்கள் போராட்டம்.

- Advertisement -
Ad imageAd image

கோவை மாவட்டம், மழையின் காரணமாக 5 ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்த பாலத்தை சரி செய்யாத அரசை கண்டித்து கருப்பு கொடியுடன் கண்ணீர் அஞ்சலி போனரை வைத்த கிராம மக்கள் அரசிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சிகுட்பட்ட குரும்பனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கும், மேட்டுப்பாளையம் நகர பகுதிக்கு செல்லும் சேரன் நகர் பகுதிக்கும் இடையே ஒரு நீரோடை செல்லும் நிலையில் அதற்கு இடையில் தரைப்பாலம் ஒன்று உள்ளது.

சேதம் அடைந்த பாலம் மற்றும் சாலை

இந்த பாலம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக தரைபாலம் மற்றும் அங்குள்ள சாலையும் சேதமடைந்தது. சேதமடைந்த பாலத்தை கடந்தே குரும்பனூர், கோடதாசனூர்,பஞ்சுகாடு உள்ளிட்ட குக்கிராம மக்கள் மேட்டுப்பாளையம் நகர பகுதிக்கு வர முடியும் என்று கூறபடுகிறது. இந்த நிலையில் இந்த பாலத்தை சீரமைத்து தர வேண்டி கோரி, கடந்த 5 ஆண்டுகளாக அந்த கிராம மக்கள் அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் முறையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

சேதம் அடைந்த பாலம் மற்றும் சாலை

ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இந்த கனமழையால் சேதமடைந்த பாலத்தை கண்டு கொள்ளாததால், அரசு நிர்வாகத்தை கண்டித்தும், ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் குரும்பனூர் கிராம பொதுமக்கள் அந்த சேதமடைந்த பாலத்தின் மீது நின்று, கருப்பு கொடியுடன் ஐந்தாம் ஆண்டு கண்ணீர் நினைவஞ்சலி என்ற கண்ணீர் அஞ்சலி பேணரை வைத்து தங்களது எதிர்ப்பினை பதிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேதம் அடைந்த பாலம் மற்றும் சாலை

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சிகுட்பட்ட குரும்பனூர் கிராமத்தில் சேதம் அடைந்த பாலம் மற்றும் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வரும் நிலையில், விரைவில் பாலத்தையும், சாலையையும் சீரமைத்து தர வேண்டி கிராம பொதுமக்கள் வலியுறுத்தி கோரிக்கை வைத்துள்ளனர்.

Share This Article
Leave a review