Thanjavur : குரு பெயர்ச்சி – திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு..!

1 Min Read

குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குருபரிகார ஸ்தலமாக திகழும் அருள்மிகு. தஞ்சை மாவட்டம் திட்டை வஷிஸ்டேஸ்வரர் திருக்கோவிலில் பக்தர்கள் வசதிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குரு பார்த்தால் கோடி நன்மை என்பார்கள்.

- Advertisement -
Ad imageAd image

அத்தகைய சிறப்புமிக்க குருபகவான் இன்று மே 1 ஆம் தேதி மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பிரவேசிக்கிறார். அதற்காக தஞ்சை மாவட்டம் திட்டை அருள்மிகு, வஷிஸ்டேஸ்வரர் திருக்கோவில் குருபரிகார ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது.

குரு பெயர்ச்சி – திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு

இந்த கோவிலில் குருபகவான் தனி சன்னதியில் தெற்கு திசை நோக்கி ராஜகுரு வாக அருள்பாலித்து வருகிறார். இன்று குரு பெயர்ச்சியை முன்னிட்டு, தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

பக்தர்கள் வருகையை ஒட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

குரு பெயர்ச்சி – திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு

அப்போது நான்கு சக்கர வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் நிறுத்த தனியாக இடம் அமைக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க தனி தனி வழிகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று குரு பெயர்ச்சியை முன்னிட்டு இன்று முதல் ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய பரிகார ராசிக்காரர்கள் சிறப்பு அர்ச்சனை செய்து செல்கின்றனர்.

Share This Article
Leave a review