கடலூரில் பயங்கரம் : அதிமுக முன்னாள் கவுன்சிலர் வெட்டி படுகொலை : 3 வாலிபர்கள் கைது..!

2 Min Read

முதுநகர் அருகே அதிமுக முன்னாள் கவுன்சிலர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சென்னையில் பதுங்கி இருந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

- Advertisement -
Ad imageAd image

கடலூர் மாவட்டம், அடுத்த முதுநகர் அருகே வண்டிப்பாளையம் ஆலை காலனியை சேர்ந்தவர் புஷ்பநாதன் (35). அதிமுக முன்னாள் கவுன்சிலரான இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

புஷ்பநாதன் இரவு பைக்கில் புது வண்டிப்பாளையம் சூரசம் ஹார தெருவில் சென்ற போது சிலர் பைக்கில் பின் தொடர்ந்துள்ளனர். பைக்கில் சென்று கொண்டிருந்த போது திடீரென அவர்கள் முன்னோக்கி வந்து வழி மறித்துள்ளனர்.

அதிமுக முன்னாள் கவுன்சிலர் வெட்டி படுகொலை

வழிமறித்த கும்பல் கையில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்ததால் பதறிப்போன புஷ்பநாதன், பைக்கை போட்டு விட்டு தப்பி ஓடினார். ஆனால் அவர்கள் விரட்டி சென்று கத்தியால் சரமாரியாக வெட்டினர். அதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த புஷ்பநாதன் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூர் முதுநகர் காவல் நிலையம்

பின்னர் மர்ம நபர்கள் பைக்குகளில் தப்பி சென்றனர். தகவலறிந்து முதுநகர் போலீசார் புஷ்பநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், புஷ்பநாதனின் உறவினர்கள் கடலூர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர் அரசு மருத்துவமனை

போலீசார் அவர்களிடம் கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்று அவர்கள் சாலை மறியலில் இருந்து கலைந்து சென்றனர். தனிப்படையினர் சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

3 வாலிபர்கள் கைது

அதில், கொலையாளிகள் சென்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.  இதை அடுத்து தனிப்படை போலீசார் சென்னை சென்று, ஆலை காலனியை சேர்ந்த அஜய் (21), நேதாஜி (23) சந்தோஷ் (24) ஆகியோரை கைது செய்து,

கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் முதுநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review