தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் மற்றும் செல்லத்துரை. இவர்கள் வாகனத்தில் கூப்பன் மூலம் தங்களிடம் உள்ள டிவி, வாஷிங் மெஷின் மற்றும் கொலுசு போன்றவை வாங்குபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என கூறி அவர்களிடம் இருந்த சைனா பொருட்களான டிவி, வாஷிங் மெஷின் போன்ற எலக்ட்ரிக்கல் பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் தென்காசி மாவட்டம் மாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சீதா என்பவருக்கு டிவி விற்பனை செய்யப்பட்டுள்ளது. அவரும் அதனை சோனி டிவி என நம்பி வாங்கி உள்ளார்.
வாங்கிய சில தினங்களில் டிவி பழுது அடைந்துள்ளது இது குறித்து தகவல் தெரிவிக்க முருகன் மற்றும் செல்லத்துரை இருவரையும் தொடர்பு கொண்ட பொழுது அவர்கள் ஏமாற்றியது தெரியவந்தது. மேலும் வாங்கிய டிவி மற்றும் கொலுசுக்கு அவர்கள் ரசீதும் வழங்காமல் சென்றுள்ளனர்.
இதன்பின் தாங்கள் ஏமாந்தது தெரிய வர சீதா கடையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரினை ஏற்றுக்கொண்ட தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமாரின் உத்தரவின் பேரில் துணை கண்காணிப்பாளர் பரணபாஸ் அவர்களின் தலைமையில் கடையம் ஆய்வாளர் மேரி ஜெனிதா
மற்றும் காவல்உதவி சிறப்பு ஆய்வாளர் பிரவீன்,மகேஷ் சங்கரன்கோவில் பகுதியில் பதுங்கி இருந்த இருவரையும் கடையம் காவல்துறையினர் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.
கைதான இருவரும் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பதாக முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது .
சைனா பொருட்களை பிரபல தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனத்தின் டிவி என்று மோசடி செய்த இருவரின் மீதும் மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .
மேலும் இந்த மோசடி சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பேசும் பொருளாக உள்ளது