நீலகிரி மாவட்டம், அடுத்த குன்னூர் அருகே 7 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை. போக்சோ சட்டத்தில் தேயிலை தோட்ட தொழிலாளி கைது. இந்த சம்பவம் குறித்து காணலாம்.
நீலகிரி மாவட்டம், அடுத்த குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ளது. அங்கு பழனியப்பா எஸ்டேட் ஒன்று உள்ளது. இந்த பழனியப்பா எஸ்டேட்டில் வட மாநில தொழிலாளர்களும், உள்ளூர் தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜெய்சங்கர் வயது 48. இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகளும் உள்ளதாக கூறப்படுகிறது. பின்பு மனைவி திருப்பூரில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெயசங்கர் இங்கு பழனியப்பா தேயிலை தோட்டத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த வியாழக்கிழமை இரவு பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 7 வயது சிறுமியை அழைத்து வந்து குளியல் அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது குழந்தையின் அலரல் சத்தம் கேட்டு அவருடைய தாயார் ஓடி வந்து அவரை மீட்டு உள்ளார். பின்னர் ஜெய்சங்கர் கோவைக்கு தப்பி ஓடி விட்டான்.
இதனை தொடர்ந்து கொலக்கம்பை காவல் நிலையத்தில் குழந்தையின் தாயார் அளித்த புகாரின் பெயரில் கொலக்கம்பை இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி சப் இன்ஸ்பெக்டர் வளர்மதி மற்றும் காவல்துறையினர் ஜெயசங்கரை தேடி வருகின்றனர்.

கோவையில் இருந்து மீண்டும் வீடு திரும்ப வந்த ஜெய்சங்கரை கையும் களவுமாக பிடித்து குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்பு ஜெயசங்கர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.