கோவை மாவட்டம், அடுத்த உக்கடம் வள்ளியம்மை பேக்கரி அருகில் கோவை மாவட்டம் சார்பாக பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் அன்சாரி கண்டன உரை ஆற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள், போரில் காயம் அடைந்தது போல் கை, கால்,தலைப்பகுதிகளில் இரத்த கட்டு அணிந்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பாலஸ்தீன் தெற்கு எல்லையில் ரஃபா பகுதியில் பொதுமக்கள் கூடாரங்களில் இரவில் உறங்கிக் கொண்டிருக்கின்ற போது அப்பாவி மக்கள் மீது ஏவுகனை குண்டுகளை வீசி குழந்தைகள் உட்பட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்த இஸ்ரேலின் செயல்களை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.
ரஃபா எல்லையில் போர் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் (ICJ) அறிவித்த பிறகும்,

அதனை சிறிது அளவு பொருட்படுத்தாமல் தொடர்ந்து இனப்படுகொலை ஈடுபடும் இஸ்ரேலுடன் தூதராக உறவை இந்தியா உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

பாலஸ்தீன நாட்டை இதுவரை 140 நாடுகள் தனி நாடாக அங்கீகரித்துள்ள நிலையில் பாலஸ்தீன் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீட்கப்படவும், தன்னாட்சி பெற்ற பலஸ்தீனம் இயங்க அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தினர்.