இந்தியாவின் விளையாட்டு தலைநகரமானது தமிழ்நாடு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாட்டின் பெருமைமிக்க விளையாட்டு நிகழ்வான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்-2023 போட்டி தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் 19.01.2024 முதல் 31.01.2024 வரை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், தேசிய விளையாட்டு, சர்வதேச போட்டிகளில் தமிழ்நாடு வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் 98 பதக்கங்களை வென்று தமிழ்நாடு 2வது இடத்தை பிடித்து வரலாறு படைத்துள்ளது.
சென்னையில் ‘கேலோ’ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 19-ந் தேதி தொடங்கி 12 நாட்கள் நடைபெற்றது. நேற்றுடன் போட்டிகள் நிறைவடைந்தன. இதில் தமிழக வீரர்கள் எண்ணற்ற பதக்கங்களை பெற்றனர். இந்த விளையாட்டு போட்டியை திறமையாக நடத்தி முடித்த இளைஞர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் தனது ‘எக்ஸ்’ வலைதள பதிவில் பல சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் மூலம் சமீபத்தில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் இந்தியாவின் விளையாட்டு தலைநகராகவும், உலகளவில் விளையாட்டு மையமாகவும் தமிழ்நாடு தனது நிலையை உறுதிப்படுத்தி உள்ளது.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு 38 தங்கம், 21 வெள்ளி மற்றும் 39 வெண்கலம் என 98 பதக்கங்களுடன் ரன்னர் ஆனது. எங்களது சாம்பியன்களின் ஒரு அற்புதமான செயல்திறன் கேலோ இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் வரலாறு படைத்துள்ளது. தமிழ்நாடு முதன்முறையாக ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

வெற்றிகரமாக போட்டிகளை சிறப்பாக நடத்தி முடித்த அமைச்சர் உதயநிதி மற்றும் துறை சார்ந்த அனைவருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை குறைவின்றி நடத்தியதற்காக அவரது குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்.வருங்கால நட்சத்திரங்களான நமது திறமையான விளையாட்டு வீரர்களுக்கு இந்த சாதனை வழி வகுக்கும்.
விளையாட்டு என்பது வச தியானவர்களுக்கு என்று இல்லாமல், ஏழை எளியவர் களுக்கும், கடைக்கோடியில் உள்ளவர்களுக்கும் வாய்ப் பாக அமைய வேண்டும் என்று அரசு செயல்பட்டு வருகிறது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 12 ஆயிரம் கிராமங்களுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங் கள் தொகுப்பு அளிக்கப்படும். இந்நிகழ்ச்சியை வரும் 7ம் தேதி திருச்சியில் தொடங்கி வைக்கிறேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.