ஜெர்மனியில் உள்ள மனைவிக்கு பதிவு தபாலில் ‘தலாக் – கணவர் கைது..!

2 Min Read

காஞ்சிபுரம் மாவட்டம், அடுத்த பெரிய காஞ்சிபுரம் லிங்கப்பன் தெருவை சேர்ந்தவர் இஸ்மாயின் ஷரிப். இவரது மகன் நாசர் ஷரிப் வயது (35). இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அப்பந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மஸ்தான் ஷரிப் மகள் ஆயிஷா பிர்தோஸ் வயது (33) என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு திருமணமாகி இருவரும் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

- Advertisement -
Ad imageAd image
திருமணமாகி இருவருக்கும் குடும்ப தகராறு பிரச்சனை

இந்த நிலையில், கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த பிரச்சனை நாளடைவில் இருவருக்கும் பிரிவை ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் குடும்ப தகராறு பிரச்சனை காரணமாக ஆயிஷா பிர்தோஸ் கடந்த ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து ஜெர்மன் நாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டாராம். இதேபோல், ஆயிஷா பிர்தோஸ் கணவர் நாசர்ஷரிப்பும் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வருகிறார்.

காஞ்சிபுரம் ஆரணி மகளிர் காவல் நிலையம்

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாசர் ஷரிப், திருமணமாகி இருவருக்கும் குடும்ப தகராறு பிரச்சனை காரணமாக இஸ்லாமிய முறைப்படி திருமண முறிவு (முத்தலாக்) செய்வதாக தெரிவித்து பதிவு தபால் மூலம் ஜெர்மனியில் இருக்கும் மனைவி ஆயிஷா பிர்தோசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இஸ்லாமிய முறைப்படி திருமண முறிவு முத்தலாக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிலையில் ஜெர்மனியில் வேலை பார்த்த மனைவி ஆயிஷா பிர்தோஸ்க்கு பதிவு தபால் மூலம் தலாக் அனுப்பியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

திருவண்ணாமலை நீதிமன்றம்

இதனை அடுத்து ஜெர்மனியில் வேலை பார்த்து கொண்டிருந்த ஆயிஷா பிர்தோஸ் ஜெர்மனியில் இருந்து நேற்று முன்தினம் நாடு திரும்பினார். பின்னர் இதுகுறித்து ஆயிஷா பிர்தோஸ் ஆரணி மகளிர் காவல்நிலையத்தில் சென்று புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நாசர்ஷரிபிடம் பிடித்து விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர். அதில் முறைப்படி விவாகரத்து பெறாமல், 2-வது திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்துவந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து ஆரணி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து நாசர் ஷரிப், அவரது தந்தை இஸ்மாயின் ஷரிப் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Share This Article
Leave a review