தமிழக கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலிவில் நீர்வரத்து வினாடிக்கு 2500 கன அடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டி செல்கின்றன.
தர்மபுரி மாவட்டம், அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து வினாடிக்கு கடந்த மூன்று மாதங்களாக மிக குறைந்த அளவிலே நீர்வரத்து வந்தன.

தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் திடீரென நீர்வரத்து அதிகரிப்பு – மத்திய நீர்வளத்துறை
நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்த நிலையில் கடந்த 17 நாட்களாக நீர் வரத்து 200 கன அடியாக நீடித்து வந்தன. அப்போது குறைந்த அளவு தண்ணீர் என்பதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆங்காங்கே தண்ணீர் இல்லாமல் வறண்டும் வெறும் பாறைகளாகவே கண்களுக்கு தென்பட்டன.
பின்பு ஆற்றில் தண்ணீர் இல்லாததால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்தன. இந்த நிலையில் தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து திடீரென அதிகரித்து வினாடிக்கு 2500 கன அடியாக நீடித்து வருகிறது.

தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் திடீரென நீர்வரத்து அதிகரிப்பு – மத்திய நீர்வளத்துறை
இதனால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டி செல்கின்றன. இந்த நீர்வரத்தானது மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் திடீரென நீர்வரத்து அதிகரிப்பு – மத்திய நீர்வளத்துறை
இந்த நீர்வரத்தால் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு வழங்கக்கூடிய ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படும். அதேபோல டெல்டா பாசன விவசாயிகளும் பயனடைவார்கள் என கருதப்படுகிறது.