உளுந்தூர்பேட்டையில் அரசு பேருந்தில் ஓடிச் சென்று ஏறிய ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவன் தவறி கீழே விழுந்து பின்பக்க டயர் ஏறி படுகாயம். படுகாயமடைந்த மாணவனின் சிசிடி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்பட்டுள்ளது.மாணவர்கள் பள்ளிக்கோ,வீட்டிற்கோ செல்லுகிற அவசரத்தில் கவனம் இல்லாமல் பரபரப்பில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதே விபத்துக்களுக்கு காரணம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆரிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ் மகன் ஆகாஷ் (14) இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.வழக்கமாக தினந்தோறும் பேருந்து மூமாகவே பள்ளிக்கு சென்று வருவது வழக்கம் அதே போல் நேற்று பள்ளி முடிந்து பின்பு வீட்டுக்கு செல்வதற்காக உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றார் அப்போது உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து ஆரிநத்தம் கிராமத்திற்கு செல்லும் அரசு பேருந்து அந்த வழியாக வர பள்ளி மாணவன் ஆகாஷ் ஓடிச் சென்று அந்த பேருந்தில் முன்பக்க வழியாக ஏற முயற்சித்தார்.பேருந்து நிற்காமல் சென்றது அப்பொழுது பேருந்தில் ஏற முடியாமல் தவறி கீழே விழுந்தாஎ மாணவன் ஆகாஷ். கீழே விழுந்த மாணவனின் கால் மீது பேருந்தின் பின்பக்க டயர் ஏறியதில் மாணவன் சம்பவ இடத்திலேயே துடித்தார்.

பேருந்து பின் சக்கரம் ஏறியதில் மாணவன் படுகாயம் அடைந்தார். பின்னர் படுகாயம் அடைந்த ஆகாஷை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர் அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் சம்பவம் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் அரசு பேருந்தில் ஓடிச் சென்று ஏறி பின்பு தவறி விழுந்த படுகாயம் அடைந்த மாணவனின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது